Monday, November 29, 2010

கூட்டஞ்சோறு பதிவில் ஒரு பின்னூட்டம்

ராஜனின் உமா சங்கர் பற்றிய கட்டுரையின் தொடர்ச்சி
http://koottanchoru.wordpress.com/2010/11/28/2-%e0%ae%95%e0%ae%b2%e0%ae%bf%e0%ae%83%e0%ae%aa%e0%af%8b%e0%ae%b0%e0%af%8d%e0%ae%a9%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%89%e0%ae%ae%e0%ae%be-%e0%ae%b7%e0%ae%99/#comment-3807
//தமிழக அரசின் ரெவின்யூ டிப்பார்ட்மெண்டில் நிலவும் லஞ்சத்தின் நிலமை அதற்கான காரணங்கள் ஆகியவற்றை ஒளிவு மறைவின்றிப் பேசினார்.//
// ஒரு அரசு அதிகாரியே அரசாங்கத்தில் நடக்கும் ஊழல்களை லஞ்ச லாவண்யங்களை எந்த விதத் தயக்கமும் இல்லாமல் வெளிப்படுத்தியதுஆச்சரியமே. கலெக்டர் ஆஃபீசின் ஒவ்வொரு நிலையிலும் லஞ்சம் கொடுக்காமல் எதையுமே சாதிக்க முடியாது என்பதை விளக்கினார்//
என்று சொல்லிவிட்டு
//இந்த ஊழல்களையும், மிரட்டல்களையும், அராஜகங்களையும் நிறுத்த வேண்டுமானால் இந்தியா ஊழலில்லாத தேசமாக மாற வேண்டும் என்றால் அரசியல்வாதிகளின் தலையீடு இல்லாத தன்னாட்சி அமைப்புகள் உருவாக்குவதே ஒரே வழி என்றார்//
இவ்வாறு சொல்வது ஏன் என்று புரியவில்லை.
அதாவது மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் லஞ்சம் வாங்குவதும், வாங்க சொல்வதும் அரசியல்வாதியா? லஞ்சம் அதிகமாக காரணம் அரசு அதிகாரிகள் தான் என்று உமா சங்கர் போன்ற சுத்தமான அதிகாரிகள் கூட ஒப்புக் கொள்ளாவிட்டால் அதை எப்படி களைவது?
சரி, ஒரு விஷயம். ஒரு அரசு அதிகாரி, அமெரிக்காவில் போய் இங்கு உள்ள சீரழிவுகளை பேசுவது முறையா?





யாதும் ஊரே யாவரும் கேளிர் : கணியன் பூங்குன்றனார்

Thursday, November 11, 2010

பின்னூட்டம்:

http://tamilseermai.blogspot.com/2010/11/blog-post_07.html
வட மொழி ஒலிகளைக் குறிக்க தமிழில் புகுத்தப்பட்ட ஜ, , ஷ, ஸ, ஹ, க்ஷ, குறித்து பதிவு இட்டுள்ளீர்கள்.நாம் அறிந்த வரையில் உலகில் அதிகமாக ஒலிக்கும் மொழிகளில் வேற்று மொழி ஒலிகளைக் குறிக்க புதிதாக எழுத்துக்கள் சேர்க்க வில்லையே; தமிழில் என் சேர்க்க வேண்டும் என்பதே சாரம். உண்மை தான். தமிழில் சாதாரணமாக நாம் புழங்கும் ஒலிகளை தமிழில் எழுதிக் காட்ட முயல வேண்டும். உலகம் எங்கும் அதிகமாகப் பேசப்படும், அறியப்படும் ஆங்கிலத்தில் spelling வேறாகவும், pronunciation வேறாகவும் காட்டப் படுவது நாம் அறிவோம். அதாவது வேற்று மொழிச் சொற்களை புழங்க விட்டால், அவற்றை சரியான ஒலியுடன் உள்வாங்குவது நலம் பயக்கும் என்பது அதன் அடிப்படை. தமிழர்களைப் பொறுத்தவரை எழுதுவதே ஒலி என்ற இந்திய அணுகுமுறையில் வேறு மொழிகளில் இருந்து வந்து விட்ட- , வந்து கொண்டு இருக்கும் - சொற்களை ஒலிக்குறியீடு இட்டு (ஆங்கிலத்தில் உள்ளது போல்) காட்டும் முறை உருவாக்க வேண்டும். இரண்டு முக்கிய காரணங்களால் வேற்று மொழி சொற்கள் தமிழில் வருவதை தடுத்தல் கடினம்.
ஒன்று: உலகமயமாக்கல்; வேறு மொழி வினைச்சொற்களை தமிழ் படுத்த முடிந்தாலும், பெயர்கள், நாடுகள், அவற்றில் தலைவர்கள், அறிவியல் அறிஞர்கள் விளையாட்டு வீரர்கள் போன்றோரின் பெயரை தமிழர் சரியாக உச்சரித்தல் அவசியம். அதற்காக உலகில் உள்ள அனைத்து நாடுகளின், மொழிகளின் ஒலிக்குறியீடுகளை இறக்குமதி செய்யச் சொல்லவில்லை; ஜ, ஸ, ஷ,ஹ, முதலிய ஒலிகள் அதிகம் தேவைப் படுவது நாம் அறிந்ததே
. இன்னொன்று: தமிழகம் நாம் விரும்பியோ, விரும்பாமாலோ, இந்தியாவின் பகுதி ஆகிவிட்டது; அந்த இந்தியாவில் வட மொழிகளிலிருந்து பிறந்த மொழிகள், அவற்றை பேசுபவர் அதிகம். ஆகவே, அவற்றிலிருந்து இங்கு வந்து கழுத்தை அறுக்கும் சொற்கள் (விஷயம், பாவம்(bhaavam), முதலியன ) தவிரவும், மனிதர்கள், இடங்களின் பெயர்கள். தமிழகத்திற்கு வெளியே பணி நிமித்தம் வருபவர்கள் தங்கள் உச்சரிப்பினால் எவ்வளவு கேலிக்கு உள்ளாகிறார்கள் என அவர்களே சொல்ல முடியும். தமிழகத்திலேயே உள்ள கிணற்றுத் தவளைகள் இதை புரிந்து கொள்ளவே முடியாது.
சொல்ல விழைவது : தமிழர்கள் உச்சரிப்பில் கவனம் செலுத்தி, உச்சரிப்புக் குறியீடு உருவாக்கினால் இது போல வட மொழி ஒலிகளுக்காகஅந்நிய எழுத்துக்கள் வேண்டாம்.
நெற்குப்பை.தும்பி





யாதும் ஊரே யாவரும் கேளிர் : கணியன் பூங்குன்றனார்

Friday, November 5, 2010

***********வாழ்த்து***********

அனைவருக்கும் தீபாவளி வாழ்த்துக்கள்

மா.சேகர்
nerkuppai.thumbi@gmail.com





யாதும் ஊரே யாவரும் கேளிர் : கணியன் பூங்குன்றனார்

Monday, September 6, 2010

தமிழ்நாட்டில் பொது விநியோக முறை

யாதும்தமிழ் நாட்டைப் பற்றி பாசிடிவ் செய்தி வருவது குறைந்து விட்டது. ஆகவே எப்போது வந்தாலும் மகிழ்ச்சியே.

times of India செய்தி தாளில் பொருளாதார பிரச்னைகளை பல வேறு கோணங்களில் ஆராய்ந்து எழுதும் சுவாமிநாதன் ஐயர் கட்டுரையில் ஒரு வாக்கியத்தில் தமிழ்நாட்டைப் பற்றி இப்படி வருகிறது: "பொது விநியோக முறை" தமிழ்நாட்டில் மிக அழகாக வேலை செய்கிறது. அதே போல் அனைத்து மாநிலங்களிலும் இருந்து விட்டால் நன்றாக இருக்கும் என சிலர் சொல்கின்றனர். இது எப்படி இருக்கிறது என்றால் "எல்லா கிரிக்கெட்டர்களும் டெண்டுல்கரைப் போல் இருந்தால் இந்தியா எப்போதும் உலக சாம்பியன்" எனபது போலே.
இந்த கட்டுரையில் வேறு ஒரு இடத்திலும் தமிழ்நாட்டைப்பற்றி குறிப்பு இல்லை. எனக்கென்னவோ இதை பதிவு செய்யவேண்டும் என தோன்றியது.
६ septembar 2010
ஊரே யாவரும் கேளிர் : கணியன் பூங்குன்றனார்

Saturday, July 3, 2010

யாதும் ஊரே யாவரும் கேளிர் : கணியன் பூங்குன்றனார்
http://
அரசுப் பள்ளிகளில் பணி புரியும் ஆசிரியர்கள் கூட தங்கள் பிள்ளைகளை மெட்ரி குலேஷன் பள்ளிகளில் சேர்த்தனர் என்பது உண்மையே. அதனால் பிற மக்களும் அப் பள்ளிகளில் தம் பிள்ளைகளை சேர்த்தனர் என்பதும் சரி. ஆனால் அது பாதி காரணம் தான்.அரசு பள்ளிகள் புதிதாக வரவே இல்லை என நான் நினைக்கிறேன். மதுரையில் பார்த்தால் டி வீ எஸ், சேதுபதி போன்ற பள்ளிகள் அரசு மானியத்துடன், அதாவது அரசு சம்பள ஆசிரியர்கள் தனியார் மேலாண்மையில் நடத்தப்படும் பள்ளிகள். திருச்சியில் செயின்ட் ஜோசப், ஈ ஆர், ஹோலி கிராஸ், மன்னார்குடி : பின்லே, புதுக்கோட்டை : டி ஈ எல் சி, ராணி பெண்கள் பள்ளி முதலிய பள்ளிகளும் அப்படித்தான். அன்பர்கள் தமக்கு தெரிந்த ஊர்களை நினைத்துப் பார்க்கட்டும் . இதே போல புதிய பள்ளிகள் துவக்கப் படாததற்கு காரணம் அரசு மானியம் மற்றும் அங்கீகாரம் அளிப்பதை நிறுத்தியதால், புதிய பள்ளிகள் மெற்றிக் பள்ளிகளாக துவங்க வேண்டியது ஆயிற்று. கல்வி துறைக்கு மானியம் அதிகரிப்பட்டது; ஆனால் அவை பள்ளிகள் இல்லாத சிற்றூர்களில் புதிய பள்ளி துவங்கவோ, இருக்கும் ஆசிரியர்களுக்கு அதிக சம்பளம் வழங்கவோ செலவு ஆகிவிட்டது. எனக்கு தெரிந்தவரை பெரும் ஊர்களில், நகரங்களில், அரசுப் பள்ளிகள் புதிதாகத் திறக்கப் படவில்லை . பெருகும் மக்கள் தொகைக்கு ஈடு கொடுக்க புது பள்ளிகள் என் வரவில்லை? இதை யார் கேட்பது? இப்போதும் ஒன்றும் குறைந்து போய் விட வில்லை. புதிய அரசுப் பள்ளிகள் திறக்கட்டும். நிர்வாகத்தை தனியாரிடம் கொடுத்து தரம் இருந்தால் மாணவர்கள் மெட்ரி குலேஷன் பள்ளிகளுக்கு ஏன் போக வேண்டும்? நான் அரசே நடத்திய அரசுப் பள்ளியில் படித்தவன் தான். அந்த கால கட்டத்தில் மெட்ரி குலேஷன் பள்ளிகள் வரத் துவங்கவில்லை.(1970 வரை ).அரசு பள்ளிகள்- அதாவது அரசே நடத்தும் பள்ளிகள் அல்லது அரசு ஆசிரியர்க்கு சம்பளம் கொடுக்கும்; ஆனால் நிர்வாகம் தனியாரிடம் உள்ள பள்ளிகள் மட்டுமே இருந்தன. தரத்தில் அவை மிக நன்றாக இருந்தன. அதாவது திராவிடக் கட்சிகள் அரசோச்ச வந்த பின் தான் அரசு பள்ளிகள் சீரழிவு துவங்கியது என நினைக்கிறேன் .
தமிழ் கல்வியைப் பற்றியும் தங்கள் பதிவு பேசுகிறது. தமிழ் வழி கல்வி
ஐந்தாம் வகுப்பு வரையே கட்டாயமயமாக்கப் படலாம். சமூக இயல், வரலாறு, நில இயல் (பூகோளம்) , வீட்டுப் பாடமும் தோட்ட வேலையும் முதலிய பாடங்கள் முடிந்தால் பத்து வரை கூட தாய் மொழியிலேயே இருந்தால் நலமே.
ஆறிலிருந்து, அறிவியல், கணிதம் பயிற்று வழி ஆங்கிலமோ, தமிழோ என பெற்றோரின் தெரிவு இருக்கலாம்.
பத்து வரை தமிழில் கற்றோர் முன்பு தொண்ணூறு சதவீதம்.
இப்போதோ, பதினொன்று, பன்னிரண்டு வகுப்புகளில் பாடங்கள் பளு அதிகம் இருப்பதால், தமிழிலிருந்து ஆங்கிலத்துக்கு மாற வேண்டிய அழுத்தமும் இருந்தால் பிள்ளைகளுக்கு பட்டம்/ பொறியியல் /மருத்துவம்/ சேர்வது கடினம் ஆகி விடும்
தமிழ் குறைந்த பட்சம் பத்து வரை முழுமையாக அதாவது செய்யுள், உரைநடை, கட்டுரை, இலக்கணம் கற்றுவிக்க வேண்டும் : , kittipullu.blogspot.com/2010/06/blog-post_30.html#comment-form

Thursday, July 1, 2010

ஒரு பின்னூட்டம் : நகரம் நோக்கி குடி பெயரும் ஒரு தொழிலாளி

http://deviyar-illam.blogspot.com/2010/06/blog-post_29.html#comment-form
மிக பயனுள்ள தகவல்களுடன் நல்ல பதிவு. நன்றி

ஒவ்வொரு படியிலும் சிக்கனம் செய்து, உழைப்போருக்கு , சிறு தொழில் செய்வோருக்கு குறைத்துக் கொடுத்து, உருவான பொருள் விற்கும் விலையைக் குறைத்து, மேல் நாட்டு இறக்குமதியாளன் லாபத்தை அதிகமாக்கி ஏற்றுமதி தொழில் மென்மேலும் உயர்கிறது என்றாலும், கருணா போன்ற ஆயிரக்க கணக்கானோர் சிற்றூர்களில் இருந்து
வந்து, நகர் வாழ்வியலையும், தொழில் முறையும் உள்வாங்கி தடம் பதிக்கிறார்கள் என மிக எளிய நடையில் அழகாக சொல்லும் பதிவு. அறிவியல்/ தொழில்முறை/தாராள மயமாக்கல் காரணமாக விவசாயத்தை சார்ந்து இருப்போரும், சிறு ஊர்களில் வசிப்போரும் நகரம் நோக்கி குடிபெயர்ந்து வருகிறார்கள்; மென்மேலும் வருவார்கள்; அதை சந்தை பொருளாதாரம், உலக மயமாக்கலின் கெட்ட பின் விளைவுகள் எனக் கருதாமல், எவ்வாறு வழிப்படுத்த வேண்டும் என முனைவதற்கு உங்கள் பதிவு ஒரு வழிகாட்டி.
ஒரு அன்பர் சைனாவைப்பற்றி பின்னூட்டத்தில் குறிப்பிட்டிருந்தார்; ஒரு பதிவில் தாங்களே, தொழில்/ ஏற்றுமதி விஷயங்களில் இந்திய- சீனா ஒப்பு நோக்கி எழுத வேண்டும் எனக் கேட்டுக்கொள்கிறேன்

Monday, June 28, 2010

பார்க்க:
விமரிசனம் : காவேரி மைந்தன்: ஒன்றும் எழுத வேண்டாம் என்று தான் நினைத்தேன் …தமிழச்சி எழுத வைத்து விட்டார்
http://vimarisanam.wordpress.com/2010/06/26/%e0%ae%92%e0%ae%a9%e0%af%8d%e0%ae%b1%e0%af%81%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%8e%e0%ae%b4%e0%af%81%e0%ae%a4-%e0%ae%b5%e0%af%87%e0%ae%a3%e0%af%8d%e0%ae%9f%e0%ae%be%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%8e%e0%ae%a9/#comment-150


உங்கள் பதிவின் சாரம் தெளிவு.
அப்படிப் பார்த்தால் தமிழச்சி மட்டுமல்ல, வாலி முதற்கொண்டு அத்துணை "கவிஞர்கள்" படித்த கவனங்களிலும் ( "கவிதை" என்பதே தமிழ் இல்லை என்கிறீர்கள்!) பிற மொழி சொற்கள் மிகுந்தே உள்ளன. கவி வட மொழி சொல் என்னும்போது கவி அரங்கம் எப்படி?
ஆனால் ஒன்று சொல்ல வேண்டும்: சில சொற்கள் தமிழிலிருந்தும் வட மொழிக்கு சென்றிருக்கின்றன என நான் கருதுகிறேன். உதாரணம் : நீர், மீன், முதலிய சொற்கள் வட மொழியில் இருந்தாலும் அவை தமிழில் முதலில் வந்திருக்க வேண்டும் எனத்தோன்றுகிறது. உலகம் "லோகம்" என்பதிலிருந்து வந்திருக்கலாம் எனத் தோற்றினாலும் இருவழி பயணம் இருந்திருக்கக்கூடும் .
கோடு எந்த இடத்தில் வரைந்து இதற்கு அப்பால் வந்தவை திசை சொற்கள் என எந்த காலத்திலும் தெளிவு இல்லை.
பாவம் bhaavam என்றாலும் (முக baavam ), பாவம் (புண்ணியத்துக்கு எதிர்ச்சொல்) இரண்டுமே வட மொழியிலிருந்து வந்தது போல் தெரிகிறது. bhaavam என்பதற்கு மாற்று சொல் இல்லாமலேயே பல நாள் கழித்து விட்டோம்.
கிரீடம், தீர்க்க தரிசி, இதிகாசம், சிலிகான், கோத்திரம், ஜடை ,ரயில் என்ற சொற்களை வேற்று மொழி சொல் என தள்ளி விட்டாலும், உலகம், கவிதை, ஆலயம், பாத்திரம் என்ற சொற்களை அதே போல் தள்ளிவிடுவது எளிது அல்ல. அவற்றுக்கு வேறு சொல் இருந்தாலும் அவை தமிழ் சொற்கள் என ஒரு தலைமுறை நம்பி விட்டது.
முந்தைய நூற்றாண்டுகளில் எப்படியோ தெரியாது; கடந்த நூறு ஆண்டுகளில் அறிவியல் வளர்ச்சியின் காரணமாக தொலை தொடர்பு, ஊடகங்கள், அரசு முறைகள், காரணமாக பலப்பல மொழிகளுடன் தமிழின் interaction மிக பல மடங்கு ஆகிவிட்டது. இந்த கால கட்டத்தில் வேறு மொழி சொற்களை எவ்வாறு எதிர் கொள்வது என தமிழ் அறிஞர்கள் சிந்திக்கவில்லை; சொல்ல வில்லை. வாதிடவில்லை;
இன்னும் வரும் காலத்தில், தனித்தமிழ் என்பது நடைமுறையில் சாத்தியமா* என்றே தெரியவில்லை. குறைந்த பட்சம்* கவிதைகளில் திசை சொற்களை தவிர்த்து எழுத முயலலாம். * குறியிட்ட சொற்கள் தமிழ் சொற்கள் இல்லை தான்; அவற்றுக்கு ஈடான சொல் எனக்கு உடனே தோன்றவில்லை; மன்னிக்கவும்.
நெற்குப்பை தும்பி
http://makaranthapezhai.blogspot.com
.

Wednesday, June 16, 2010

pinnootttam

பார்க்க :
விஸ்வாமித்ரா மகரிஷி : போபால் traajidiyum ஊடகங்களின் குழப்படியும்

http://wisewamitran.blogspot.com/2010/06/24.html?showComment=1276682506661_AIe9_BEtCk-G0im1VklPR1UmOg4jj569CoAxaTSFtNV43DV8ZsTrBi-zkj86PhOIi6f5Mqjm2NhCjzl2-c6Al-9LcDKhSf7JYEei8Pur0DiR3g5WFqFUpXESMC9_fxkgQ5H2ko73Ks2eMzIc9zul81G8iFUqL89N6EBk_YNoU7PyIkdlci67AkWGj-5hww6mtysVuQi3erydvmI1OLKZgzZiapGkV-H3OA#க௮௪௬௮௭௮௪௧௨௯௩௮௯௨௩௪௮௪௮

என் பின்னோட்டம்:
THE COMPLETE INFORMMATION HAS NOT BEEN GIVEN TO/KNOWN TO/UNDERSTOOD BY THE GENERAL PUBLIC.RECENTLY I HAPPENED TO SEE AN EDITORIAL IN AN ENGLISH NEWSPAPER: THE PLANTS USING METHYL ISOCYANATE, SUCH AS UNION CARBIDE, ARE EXPECTED TO KEEP AN ARRANGEMENT TO SPRAY AN ANTI-DOTE IN EMERGENCIES IF AND WHEN THE METHYL CYANATE LEAKS. IN THE BHOPAL PLANT, THEY USED TO HAVE THE ANDI-DOTE. IN THE NAME OF ECONOMY MEASURES, THE COMPANY MANAGEMENT STOPPED THE ARRANGEMENT. WHEN THE LEAK OCCURED, THEY COULD NOT DO ANYTHING.THAT IS, THOUGH IT IS AN ACCIDENT, CHEMICAL PLANTS, USING SUCH LETHAL CHEMICALS ARE EXPECTED TO KEEP SUCH ANTI-DOTES READY AND IN THIS CASE, THE MANAGEMENT IS RESPONSIBLE FOR DISCONTINUING THE EMERGENCY FIGHTING ARRANGEMENT. THEY ARE THEREFORE PUNISHABLE FOR CRIMINAL NEGLIGNECE

Saturday, May 15, 2010

படித்ததில் பிடித்தது

http://thirutamil.blogspot.com/2010/03/blog-post.html

தமிழ் வாழ்க வென்பதிலும் தமிழ் வாழாது
தமிழ்ப் பெயரை வைப்பதிலும் தமிழ் வாழாது
குமிழ்ச் சிரிப்பைப் பெருஞ் சிரிப்பாய் அவிழ்த்துக் கொட்டும்
கொக்கரிப்புப் பேச்சாலுந் தமிழ் வாழாதே!
அமிழ்கின்ற நெஞ்செல்லாம்; குருதியெல்லாம்
ஆர்த்தெழும் உள் உணர்வெல்லாம் குளிருமாறே
இமிழ் கடல் சூழ் உலகமெல்லாம் விழாக் கொண்டாடி
ஏற்றமிகச் செய்வதிலும் தமிழ் வாழாதே!'

Thursday, May 13, 2010

ஈழ மக்களின் இன்றைய தேவை...

A good write-up on the position of Tamils in Sri Lanka:

http://blog.tamilsasi.com/2010/05/blog-post_13.html,
reproduced here:


மே 2009ல் நடந்த பேரழிவுக்குப் பிறகு, திக்கு திசை இல்லாமல் தமிழ்ச் சமுதாயம் அல்லாடிக் கொண்டிருக்கிறது. அர‌சிய‌ல் த‌லைமை எதுவும் இல்லாமல், எந்த‌ நோக்கும் இல்லாமல், தெளிவானப் பார்வையும் இல்லாமல் ஒரு குழ‌ப்பான‌ சூழ்நிலையிலே த‌மிழ் ம‌க்க‌ளை விட்டுச் சென்றிருக்கிறார்க‌ள் தமிழீழ விடுத‌லைப் புலிக‌ள். விடுதலைப் புலிகள் தமிழீழத்தின் பெரும்பான்மையான நிலங்களையும், வெளிநாட்டுத் தமிழர்களையும் தங்களின் கட்டுப்பாட்டில் வைத்திருந்த பொழுது ஒன்றாக தெரிந்த ஈழத்தமிழினம் இன்றைக்கு பல்வேறு துண்டுகளாக தெரிகிறது.

தமிழீழ தேசியத் தலைவர் பிர‌பாகரன் போன்ற‌ ஆளுமை மிக்க‌ த‌லைவ‌ர்க‌ளின் திடீர் மறைவும், இரண்டாம் கட்டத் தலைவர்கள் இல்லாத சூழ்நிலையும் குழ‌ப்ப‌ங்க‌ளையே ஏற்படுத்தும். அது தான் தற்பொழுது ந‌ட‌ந்தேறி வ‌ருகிற‌து. அடுத்த‌ த‌லைமையைக் கைப்ப‌ற்ற‌ ந‌ட‌க்கும் போட்டி, ப‌ல்வேறு குழுக்க‌ளுக்குள் ந‌ட‌க்கும் மோத‌ல்க‌ள் என‌ குழ‌ப்ப‌மான‌ சூழ்நிலையே தற்பொழுது உள்ள‌து. தற்பொழுது ந‌ட‌ந்துக் கொண்டிருக்கின்ற‌ எந்த‌ நிகழ்வும் தமிழர்களுக்கு ந‌ம்பிக்கை அளிப்பதாக இல்லை. ஒரு மோச‌மான‌ கால‌க்க‌ட்ட‌த்திலே த‌மிழ‌ர்க‌ள் இருக்கிறோம். ஒரு வலுவான தலைவனை இழக்கும் ஒரு சமூகம் இப்படியான ஒரு சூழ்நிலையையே எதிர்கொண்டு வந்துள்ளதை பல்வேறு வரலாறுகளில் கண்டுள்ளோம். அதனையே தமிழர்களும் எதிர்கொண்டு வருகிறோம்.


ஈழ‌த்திலே இன்ன‌மும் சுமார் ஒரு ல‌ட்ச‌ம் ம‌க்க‌ள் த‌டுப்பு முகாம்க‌ளில் உள்ள‌ன‌ர். போர்க் காலத்தில் புதைக்கப்பட்ட கண்ணி வெடிகளை அகற்றும் பணிக் காரணமாக மக்களை இன்னமும் முகாம்களில் வைத்திருக்க வேண்டியுள்ளதாக சிறீலங்கா அரசாங்கம் கூறுகிறது. அது தான் காரணம் என்பதை நம்மால் ஏற்றுக் கொள்ள முடியாமல் உள்ளது. தமிழர் பகுதியில் நடைபெற்று வரும் சிங்களக் குடியேற்றம், சிங்கள-புத்த மயமாக்கம் போன்றவை தமிழர்கள் நிலங்களைக் களவு கொண்டு வருகின்றன. ஆரம்பக் காலங்களில் கிழக்குப் பகுதியில் நடந்த குடியேற்றங்கள் போலவே தற்பொழுது கிளிநொச்சியிலும் குடியேற்றங்கள் நடந்து வருவதாக கூறப்படுகிறது. தமிழ் நிலம் எங்கும் சிங்கள இராணுவ முகாம்கள் நிறைந்து உள்ளன. இந்திய வியாபாரிகளும், முதலாளிகளும் ஈழ நிலங்களை ஆக்கிரமிக்கத் தொடங்கி உள்ளனர். நெல் விளையும் மன்னாரின் விளை நிலங்களை வர்த்தகமயமாக்கும் போக்கும் நடந்து வருவதாக செய்திகளில் காண முடிகிறது.


தடுப்பு முகாம்களில் இருக்கும் மக்களில் பிற இடங்களில் உறவினர்களை உடையவர்கள் தடுப்பு முகாம்களில் இருந்து வெளியே சென்றிருக்கிறார்கள். ஆனால் எந்த உறவும் அற்ற மக்கள் இன்னமும் தடுப்பு முகாம்களில் அடைப்பட்டு இருக்கின்றனர். ஈழத்தின் போரை தங்களின் தலையில் சுமந்து போராடிய வன்னி மக்களை தங்கள் உறவினர்களாக்கிக் கொள்ள யாழ்ப்பாணத்தில் இருந்தோ, திருகோணமலையில் இருந்தோ, மட்டக்களப்பில் இருந்தோ, ஈழ மக்களின் போராட்டத்தை தாங்களே இனி சுமக்கப் போவதாக கூறும் வெளிநாட்டில் இருந்தோ இன்னமும் யாரும் முன்வாராதது வேதனையான சூழ்நிலையே ஆகும். த‌டுப்பு முகாம்க‌ளை விட்டு வெளியே வ‌ந்த‌ ம‌க்க‌ளுக்குச் ச‌ரியான‌ வாழ்வியில் தேவைகள் இன்னும் கிடைக்காத சூழ்நிலையே உள்ள‌து. போரில் த‌ங்க‌ள‌து உற‌வுக‌ளை, பெற்றோர்க‌ளை, குழ‌ந்தைக‌ளை இழ‌ந்து த‌விக்கும் இம் ம‌க்க‌ளுக்கு கூடுதல் பிரச்சனையாக த‌ற்பொழுது வாழ்விய‌ல் பிர‌ச்ச‌னைக‌ளையும் எதிர்கொள்ளும் அவ‌ல‌மான‌ சூழ்நிலையே உள்ளது.

ஈழ‌ ம‌க்க‌ளின் போராட்டத்தை இனி தாங்க‌ளே சும‌க்க‌ப் போவ‌தாக‌ கூறும் வெளிநாடுத்த‌மிழ‌ர்க‌ளோ, அதிகார‌த்தைக் கைப்ப‌ற்றும் போட்டியில் பிரிந்து கிட‌க்கின்ற‌ன‌ர். நியூயார்க்கைச் சேர்ந்த வழக்கறிஞர் உருத்திரகுமார் நாடு க‌ட‌ந்த‌ த‌மிழீழ‌ அர‌சாங்க‌த்தை உருவாக்கும் முய‌ற்சியிலே இருக்கின்ற‌ன‌ர். ம‌ற்றொரு குழு நார்வேயைச் சேர்ந்த‌ நெடிய‌வ‌ன் த‌லைமையில் ம‌றுப‌டியும் ஆயுத‌ப் போராட்ட‌த்தை முன்னெடுக்கும் முய‌ற்சிக‌ளை செய்வ‌தாக‌க் கூற‌ப்ப‌டுகிற‌து. இரு வார‌ங்க‌ளுக்கு முன்பு மே முதல் வாரத்தில் நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்திற்கான‌ தேர்தல் அமெரிக்கா, க‌ன‌டா உள்ளிட்ட‌ நாடுக‌ளில் ந‌ட‌ந்தேறிய‌து. எதிர்பார்த்த அளவுக்கு பெரிய‌ அள‌விலான‌ ப‌ங்க‌ளிப்பு இந்த‌ தேர்த‌லில் இருந்த‌தாக‌ தெரிய‌வில்லை.
ஆனால் ந‌டைபெற்ற‌ தேர்த‌லில் ப‌ல்வேறு குழ‌ப்ப‌ங்க‌ளும், குள‌றுப‌டிக‌ளும் ந‌ட‌ந்தேறி இருப்பதாக தமிழ்நெட் இணையத்தளம் கூறி வருகிறது. புதின‌ம் இணைய‌த்த‌ள‌மோ த‌மிழ்நெட் குழ‌ப்ப‌த்தை ஏற்ப‌டுத்துவ‌தாக‌ கூறுகிற‌து. புதின‌ம் உருத்திர‌குமார் அமைக்கும் நாடு க‌ட‌ந்த‌ அர‌சாங்க‌த்தை ஆத‌ரிக்கிற‌து. தமிழ்நெட் இணையத்தளம் நெடியவன் தலைமையிலான குழுவை முன்னிறுத்துகிறது. ஒரு வருடம் முன்பு ஆங்கில‌த்தில் த‌மிழ்நெட், த‌மிழில் புதின‌ம் என‌ ஈழ‌த்தில் ந‌டைபெறும் செய்திக‌ளை த‌மிழ‌ர்க‌ளின் பார்வைக்கு ஒரே மாதிரியாக‌ கொடுத்து‌ வ‌ந்த‌ செய்தித்த‌ள‌ங்க‌ள் இன்று இரு வேறு குழுக்க‌ளை பிர‌திப‌லிக்கும் த‌ள‌ங்க‌ளாக‌ மாறிப் போன‌து தற்போதைய தமிழர்களின் வேத‌னையான‌ சூழ்நிலையை நினைவுப‌டுத்திக் கொண்டிருக்கிற‌து.


இன்னொரு புற‌ம் ந‌ட‌ந்து முடிந்த‌ சிறீலங்கா தேர்த‌லில் ராஜ‌ப‌க்சே த‌ன்னுடைய‌ அதிகார‌த்தை ”வலுவாக” நிலை நாட்டி இருக்கின்றார். ஆனால் ஈழத்தில் பெருவாரியான‌ த‌மிழ் ம‌க்க‌ள் தேர்த‌லைப் புற‌க்க‌ணித்து உள்ள‌ன‌ர். அவ்வாறான சூழ்நிலையிலும் த‌மிழ் தேசிய‌க் கூட்ட‌மைப்பு அதிக‌ இட‌ங்க‌ளைக் கைப்ப‌ற்றி இருக்கிறது - 13 இடங்கள். புலிக‌ள் இருந்த‌ கால‌த்திலே இவ‌ர்க‌ள் கைப்ப‌ற்றிய‌ இட‌ங்க‌ள் 22. அத‌னுட‌ன் ஒப்பிடும் பொழுது இது குறைவான‌து தான் என்றாலும் இது ஒரு குறிப்பிட‌த்த‌க்க‌ வெற்றியாகும். என்றாலும் பெருவாரியான‌ த‌மிழ் ம‌க்க‌ள் இந்த‌ வாக்குப்ப‌திவை புற‌க்க‌ணித்து த‌ங்க‌ள் ந‌ம்பிக்கையின்மையையே வெளிப்ப‌டுத்தி உள்ள‌ன‌ர். என‌வே த‌மிழ் தேசிய‌க் கூட்ட‌மைப்பு மீதும் ம‌க்க‌ளுக்கு பெரிய‌ ந‌ம்பிக்கை இல்லை என்ப‌தையே இந்தப்‌ புற‌க்க‌ணிப்பு தெளிவுப‌டுத்துகிற‌து.த‌மிழ் தேசிய‌க் கூட்ட‌மைப்பும் ப‌ல்வேறு பிள‌வுக‌ளை எதிர்கொண்டே இந்த தேர்த‌லை ச‌ந்தித்த‌து. த‌னித் த‌மிழீழ‌ம் என்ற‌ கோரிக்கையை கைவிடுவ‌தாக‌வும் ச‌ம்ப‌ந்த‌ம் அறிவித்து இருந்தார்.

த‌மிழ் தேசிய‌க் கூட்ட‌மைப்பை வெளிநாட்டில் உள்ள‌ த‌மிழ‌ர் குழுக்க‌ள் ஏற்றுக் கொள்ள‌வில்லை. ஈழ‌த்தில் உள்ள‌ ப‌ல்வேறு த‌மிழ‌ர் அமைப்புக‌ளும் வெளிநாட்டில் இருந்து முன்வைக்க‌ப்ப‌டும் எதையும் ஏற்றுக் கொள்வ‌தில்லை என்ற‌ முர‌ண்ப‌ட்ட‌ச் சூழ்நிலையே த‌ற்பொழுது உள்ள‌து. வ‌லைப்ப‌திவுக‌ளிலும், எழுத்துல‌கிலும் உள்ள‌ ஈழ‌த்து அறிவுஜீவிக‌ளும் இது வ‌ரை எதையும் உருப்ப‌டியாக‌ முன்வைத்தாக‌ தெரிய‌வில்லை. (அல்லது அனைத்தையும் விட்டு ஒதுங்கி இருந்த நான் அத‌னை வாசித்திருக்க‌வில்லை)

******************

போராட்ட‌ம் என்ப‌து வெற்றி அல்ல‌து தோல்வி குறித்தான‌து அல்ல என்பதையே ஈழம் என‌க்குக் க‌ற்றுக் கொடுத்துள்ளது. போராட்டம் நடைபெறுவதற்கான அடிப்படைக் காரணிகள் இருக்கும் வரை, போராட்ட‌ம் என்ப‌து போராடும் இருப்பை தொட‌ர்ந்து த‌க்க‌வைத்துக் கொள்வ‌தே ஆகும். போராட்டம் என்பது மிகவும் நெடியது. வெற்றிகளும், தோல்விகளும் இந்தப் போராட்ட சூழ்நிலையில் தொடர்ந்து நேரக்கூடிய நிகழ்வுகளே ஆகும். தோல்விகளுக்கும், வெற்றிகளுக்கும் மத்தியிலும் தொடர்ந்து போராடும் திறனைத் தக்கவைத்துக் கொள்வதே போராட்டம் ஆகும்.

Protracted People's war என்று சொல்லப்படுகின்ற மிக நீண்ட மக்கள் யுத்தத்தை மாவோ வலியுறுத்துகிறார். புலிகளின் 30 ஆண்டு காலப் போராட்டமும் மிக நெடிய போராட்டம் தான். பல வெற்றி, தோல்விகளை தொடர்ந்து சந்தித்து வந்த இயக்கம் தான் புலிகள் இயக்கம். மிக மோசமான தோல்விகளின் பொழுதும் புலிகள் தங்களின் போராடும் இருப்பை தக்கவைத்துக் கொள்வதையே வழக்கமாக கொண்டிருந்தனர். அதனாலேயே அவர்களால் தோல்விகளில் இருந்து தொடர்ந்து மீண்டு வர முடிந்தது. ஆனால் 30 ஆண்டு கால நெடிய போராட்டத்தால் களைப்புற்ற புலிகள் தங்களின் ஒட்டு மொத்த போராட்ட களத்தையே வெற்றியை நோக்கி குறிவைத்தனர். வெற்றியா அல்லது தோல்வியா என்ற இரண்டு நிலைக்குள் போராட்டம் என்ற இருப்பு பறிபோனது. வெற்றி கிடைக்காமல் தோல்வி அடைந்த பொழுது போராட்டக் க‌ள‌ம் பறி போன‌து.


இன்றைக்கும் போராட்டத்திற்கான காரணிகள் அப்படியே தான் உள்ளது. சிங்கள இனவெறி முன் எப்பொழுதும் இல்லாத உச்சக்கட்டத்தில் இருக்கிறது. ஆனால் நாம் போராடுவதற்கான களம் தான் இல்லாமல் போனது. அது தான் புலிகள் செய்த மிகப் பெரிய தவறு. நான் புலிகளை குற்றவாளிக் கூண்டில் ஏற்றவில்லை. தமிழ் மக்களுக்காக செயல் திறனுடன் போராடிய இயக்கம் புலிகள் இயக்கம். விடுதலைப் புலிகள் இருந்த வரை தமிழ் மக்களை இந்த உலகம் நோக்கியப் பார்வையும், கடந்த ஒரு வருடத்திற்கும் மேலாக இந்த உலகம் தமிழர்களை அணுகும் முறையையும் கவனிக்கும் பொழுது புலிகள் தமிழர்களுக்கு கொடுத்த அங்கீகாரம் நமக்கு தெளிவாகிறது. இறுதிக் காலத்தில் தமிழர்களை தடுத்து வைத்தது போன்ற குற்றங்களை புலிகள் புரிந்து இருந்தாலும், தமிழர்களுக்கான ஒரு அங்கீகாரத்தை கட்டி எழுப்பிய வகையில் தமிழீழ தேசியத் தலைவர் பிரபாகரன் மீது நமக்கு இன்னமும் மதிப்பு அதிகமாகிறது.

அதே நேரத்தில் புலிகளின் முழுமையான இராணுவ அணுகுமுறை நம்முடைய அரசியல் வெளியை சிதைத்தும் வந்துள்ளது. போராட்டம் என்பது மக்களின் போராட்டமாக இருக்க வேண்டும். ஈழப் போராட்டம் என்பது புலிகளின் போராட்டம் என்பதாக இருந்ததே தவிர மக்களின் போராட்டம் என்பதாக இருக்கவில்லை. போராளிகள் தங்களை மக்களின் ஒரு அங்கமாக எண்ணாமல் ஒரு அதிகாரமையமாகவே தங்களை கட்டமைத்துக் கொண்டனர். அதிகாரமையங்கள் மக்களிடம் இருந்து அந்நியப்பட்டே போகும். ஈழப் போராட்டமும் மக்களிடம் இருந்து அந்நியப்பட்டுப் போனது.

மிக நெடியப் போராட்டத்தில் மக்களின் அன்றாட வாழ்க்கையும் மிகவும் அவசியமாகிறது. ஒரு தலைமுறை தங்களின் வாழ்க்கையைச் சிதைத்து எதிர்காலத்திற்கு விட்டுச் செல்லப் போகும் ஒரு கொடையாக போராட்டத்தை கொண்டுச் செல்ல முடியாது. அதைத் தான் ஈழப் போராட்டம் செய்தது. தொடர்ச்சியான போர் மக்களை தங்கள் வாழ்வியலை இழக்கச் செய்தது. வாய்ப்பு கிடைத்தவர்கள் எல்லாம் வெளிநாட்டிற்கு தப்பிச் செல்ல வாய்ப்புக் கிடைக்காத மக்கள் ஈழப் போராட்டத்தை முன்னெடுக்கும் சூழ்நிலையை போராட்டக் களம் ஏற்படுத்தியது. வன்னியில் உள்ள மக்கள் ஆர்ட்டலரியிலும், பிற ஆயுதங்களாலும் பலியான பொழுதும் அது அவர்கள் எதிர்கால சந்ததியினருக்காக செய்யும் தியாகமாக சித்தரிக்கப்பட்டிருந்தது. இத்தகைய வாதங்களை பல ஈழத்தமிழர்கள் முன்வைத்திருந்தனர். போராடும் வலுவை சிதைக்கவே சிங்கள இரணுவம் அடிப்பதாகவும், அதனை எதிர்த்தே போராட வேண்டி இருப்பதாகவும் பல நண்பர்கள் எதிர்வினையாற்றி இருந்தனர்.

இதை விட அபத்தமான சித்தாந்தம் எதுவும் இல்லை. தற்போதைய மக்களின் வாழ்க்கையைச் சிதைத்து எதிர்கால வாழ்க்கையை வளமாக்குவது என்பது கால ஓட்டத்தின் நியாதிகளின் படி அபத்தமானது. தற்கால மக்களின் வாழ்க்கையை பணயம் வைப்பது எந்த வகையிலும் அறமான செயலாகாது. எனவே தான் போராட்டம் என்பது மக்களின் யுத்தமாக அந்த மக்களாகவே போராடுவதாக இருக்க வேண்டியுள்ளது. சூழலுக்கு ஏற்ற போராட்டமே அவசியமாகிறது. போராட்டத்தை காலத்திற்கு ஏற்ப மாற்றுவதையும், விலக்குவதையும் பல்வேறு நாட்டின் போரட்டக்களங்களில் நாம் பார்த்து இருக்கிறோம். மாறாக ஈழப் போராட்டம் என்பது ஒரே மாதிரியாக கணிக்க கூடியதாகவும் அமைந்து விட்டது.

******

தற்பொழுது போராட்டக் களத்தையே நாம் இழந்திருக்கும் சூழ்நிலையில் போராட்டத்தை மீள் அமைப்பது என்பது களநிலையையே பொறுத்தது. வன்னியிலும், யாழ்ப்பாணத்திலும், மன்னாரிலும், மட்டக்களப்பிலும், திருகோணமலையிலும் மக்கள் போராட தொடங்கினால் போராட்டம் தொடங்கும். அவ்வாறு இல்லாமல் நார்வேயிலும், அமெரிக்காவிலும், கனடாவிலும் இருந்து வீக்கெண்டில் தொடங்குவது போராட்டமாகாது. புலிகளின் சொத்துக்கள் எல்லாம் வெளிநாட்டில் இருப்பதால் அந்த சொத்துக்களைக் கையப்படுத்த நடக்கும் சண்டையின் உச்சமே இன்று வெளிநாட்டுச் சார்ந்த போராட்டமாக உள்ள நிலையில் அந்தப் போராட்டத்தை நிராகரிக்க வேண்டிய சூழ்நிலையிலேயே தமிழ் மக்கள் இருக்கிறோம்.

இந்த உலகு ஒழுங்கு என்பது மாறிக்கொண்டே இருக்கக் கூடியதே. சூரியன் மறையாத பிரிட்டிஷ் சாம்ராஜ்யம் என்பது ஒரு காலத்தில் இருந்தது. இன்றைக்கு அது அந்த சாம்ராஜ்யம் உருவான இடத்திலேயே சுருங்கி விட்டது. சோவியத் யூனியன் என்ற தேசம் மிகவும் பலமான வலுவான தேசமாக இருந்தது. இன்றைக்கு அது சுருங்கி விட்டது. நிரந்தரமாக வலுவான தேசம் என்பது எதுவும் இல்லை. அது காலவெள்ளத்திலும், ஓட்டத்திலும் மறையக்கூடியதே. புதிய தேசங்கள் உருவாவதும் நிகழக்கூடியதே. அதே நேரத்தில் அதற்கான நெடியப் போராட்டம் மக்களைச் சார்ந்தாக மட்டுமே இருக்க முடியும். அந்தப் போராட்டம் மக்களை உள்ளடக்கியது. மக்களின் உரிமைகளைச் சார்ந்தது. தனி நாடு என்பது மட்டுமே நம்முடைய இலக்கு அல்ல. மக்களின் உரிமைகளே நமக்கு முக்கியமானது. இன்றையச் சூழ்நிலையில் தமிழ் மக்களின் உரிமை என்பது அவர்களின் வாழ்வியல் தேவைகளே.

தற்போதைய தலைமுறை பல ஆண்டுகளாக நடந்தப் போரில் பலவீனமான சூழ்நிலைகளை எதிர்கொண்டுள்ள நிலையில் போராட்டத்திற்கான களம் நமக்கு இல்லை என்பதே யதார்த்தமான சூழ்நிலை ஆகும். இன்றைய சூழ்நிலையில் மக்களின் வாழ்வியல் தேவைகள் மீள்கட்டமைக்கப்பட வேண்டும். மக்களின் இயல்பான வாழ்கைக்குரிய சூழல் அமைய வேண்டும். அவ்வாறு அமைய நாம் வழிவகுக்க வேண்டுமே தவிர நம்முடைய தனிநாட்டுக் கனவுகளை அம் மக்கள் மீது திணித்தல் என்பது எவ்வகையிலும் சரியானது அல்ல.

Tuesday, April 27, 2010

பழங்குடியினர்: சில கேள்விகள்?

பழங்குடியினரை மேம்படுத்தவேண்டும் என்பதில் இரண்டு கருத்து இல்லை.

ஆனால், அது சார்ந்த சில வினாக்களுக்கு பதில்களில் ஒருமித்த கருத்து இல்லை:
அவை:
௧. காடுகளில் சாலைகள் அமைக்காமல், பிற கட்டுமான வசதிகளை உண்டாக்காமல், அவர்களுக்கு விஞ்ஞானத்தின் வசதிகளை எவ்வாறு செய்ய முடியும்? அவர்களுக்கு சுகாதார மனைகள், தொலைபேசி, தொலை காட்சி, வேண்டுமாவேண்டாமா?
௨. சாலைகள் போடுவதற்கு, பழங்குடியினர் அல்லாதவர்கள் அங்கு வர வேண்டும்; தங்க வேண்டும்; பின், தம் இடத்திலேயே தாம் அன்னியர்கள் ஆகி விட்டதாக புகார் செய்யாமல்இருப்பாரா?
௩. அவர்களுக்கு கல்வி அளிக்க வேண்டுமா இல்லையா? ஆம் என்றால் எந்த அளவுக்கு? அவர்களுக்கு "நவீன கல்வி" அளித்தால், அவர்களை இயற்கையை ஒட்டிய அவர்தம் வாழ்க்கை முறையை விட்டுவிட்டு, நகர வாழ்க்கை முறைக்கு மாற மூளை சலவை செய்வதாகஆகாதா?
௪. சரி, அவர்களுக்கு கல்வி அளிக்கவே வேண்டாம் என்றால், அவர்களுக்கு, அரசியல் சட்டத்திலே அளிக்கப் பட்ட ஒதுக்கீடு முறையின் பலன்கள் எவ்வாறுகிடைக்கும்?
௫. நவீன கல்வி இல்லாமல், அவர்கள் இவ்வாறே காலம் காலமாக இருப்பார் என்றால், அதிலும் சில பிரச்னைகள் உண்டு: அவர்களின் வளர்ந்து வரும் மக்கள் தொகைக்கு சரியான வாழ்வு ஆதாரங்கள் அங்கேயே - அந்த காட்டு பகுதியிலேயே - தொடர்ந்து கிடைக்குமா? (உதாரணத்துக்கு, தேன், கிழங்குகள், கொட்டைகள், தோலுக்கு வேண்டிய விலங்குகள்) ,
மேலும், அவர்கள், சிறு கூட்டத்தில் உள்ளேயே திருமணம் செய்து இனத்தை பெருக்கினால், consanginous திருமணங்களால் பிறக்கும் குழந்தைகள் பிணியுடனும், ஊனங்களுடனும் பிறக்கும். . நீண்ட கால நன்மைக்காக அவர்கள், காலப்போக்கில் பொது சமுதாயத்துடன் ஒன்றிப் போவது தான் நலம் பயக்கும் என்று விஞ்ஞானிகள் சொல்லுவது சரியா?

௬. அவர்களை அங்கேயே இருக்க விட்டால், அவர்கள் வாழும் வனத்தில், நிலத்துக்கு அடியில் உள்ள கனிம வளங்கள் - கலப்பைக்கும், வண்டி சக்கரத்துக்கும் தேவையான இரும்பு, சாதம் பரிமாறும் கரண்டி செய்ய அலுமினியம், நாட்டுக்கு, ஏன், அவர்கள் தெருவுக்கு போட வேண்டிய விளக்குக்கான மின்சாரம் உற்பத்தி செய்ய கரி - முதலியவை வெளி நாட்டிலிருந்து இறக்குமதி செய்வது சரியா?
௭. சுதந்திரம் பெற்றதற்கு பின் சிற்சில பழங்குடியினர் கல்வியில் தேறி உள்ளனர்; ஒதுக்கீடு முறையிலோ, அல்லது இல்லாமலோ, பட்டதாரிகள், அதிகாரிகள் , பொறியாளர்கள், மருத்துவர்கள் ஆகி உள்ளனர்; வக்கீல்கள் உள்ளனர்; அவர்கள், தம் இனத்து பழங்குடியினர் வருங்காலத்தில் எவ்வாறு முன்னேற வேண்டும் என ஏதேனும் கருத்து வைத்திருக்கிறார்களா? அர்ஜுன் முண்டாவும், சிபு சொரேனும், தம் பழங்குடி இனத்தை எவ்வாறு முன்னேற்ற பாதைக்கு கூட்டி செல்ல விழைகிறார்கள்?
௮. இது போல எல்லா மாநிலங்களிலும், சட்ட சபைக்கு பழங்குடியினருக்கான ஒதுக்கீடு உள்ளது; ஆந்திர பிரதேசம், மகாராஷ்டிரா, போன்ற மாநிலங்களில் அமைச்சரவையில் பங்கு பெறுகிறார்கள். அவர்கள் தம்வாக்கு வங்கியை பாது காத்து கொள்ளும் அளவுக்கு, அவர்கள் வருங்காலம் பற்றிய எதாவது திட்டங்களை முன் மொழிகிறார்களா?

இவை எலாம், ஏதோ பழங்குடியினரை மடக்க வேண்டும் என்று எழுப்பும் வினாக்கள் இல்லை; இவர்களுக்கு நல்லது செய்ய வேண்டும், அவர்கள் முன்னேற்றத்தில் நம் பங்கு ஆற்ற வேண்டும் என எண்ணும் ஒவ்வொரு இந்தியன் மனதில் எழும்வினாக்களே.

உங்களைப் போன்ற வலையுலக அன்பர்கள் கருத்து கூறுங்கள்; பல நூறு கருத்துகள் வந்தால் அவற்றில் சில நூறு செயல் படுத்த முடியும்.
இதை படிக்கும் ஒவ்வொரு அன்பரும் உங்கள் எண்ணங்களை பதிவு செய்யுங்கள்.

Wednesday, April 21, 2010

நாம் மறந்த இந்தியர் : பழங்குடியினர்:

நாம் மறந்த இந்தியர் : பழங்குடியினர்:

(பிசினஸ் ஸ்டாண்டர்ட் நாழிதழில் 15/4/2010 வந்த Nitin Desai என்பவரின் கட்டுரையில் ஒரு பகுதியின் தமிழாக்கம்;
செய்தி தாள்களிலே, வலைப் பதிவுகளில் ஈழம், தலித், பார்பனீயம், வாழும் வள்ளுவர், நித்ய ஆனந்த லீலைகள் போன்ற தலைப்புக்களுக்கு வழங்குவதில் பத்தில் ஒரு பங்கு கூட நாம் பழங்குடியினர் பிரச்னைகளுக்கு வழங்குவது இல்லை எனத்தோன்றியதால் இந்த பதிவு .)

தண்ட காரண்யத்தில் கிட்டத்தட்ட நம் மக்களின் மீதே அரசு போர் தொடுக்கிறது.
கிழக்கில் பீகார்/மேற்கு வங்கம் முதல் தெற்கே கர்நாடகா/ தெலங்கானா வரை பகுதி தான் கவலைக்கு காரணம். ; ஆனால், மக்களின் (காட்டு வாசிகளின் ) துணையும், பாதுகாப்பும் இருப்பதால் துரத்தும் காவல் துறையிடம் மோத மாவோயிஸ்டுகளுக்கு ஒரு தளம் ஆகிறது. ஆகவே, நாம் களைய வேண்டியது இந்த பழங்குடியினரின் துயரங்களைத்தான்.

பழங்குடியினரிடையேயும் பிற இந்தியர்க்கும் உள்ள வளர்ச்சி நிலையில் உள்ள வேறுபாடு:இதன் மூலம் தெளிவாகும்: :
வறுமைக் கோட்டின் கீழ் இருப்பவர்

பழங்குடியினரிடையே S T 47 %
தலித்துளில் S C 37 %
பிற பின்தங்கிய இனத்தவர் OBC 26%
மற்றவர் 16%

தலித்துகளும் பின்தங்கிய வகுப்பினரும் (ஓரளவு ) தேசிய அளவிலும் , மாநில அளவிலும் அரசியல் சக்தி பெற்றுள்ளனர். பழங்குடியினர் கூட்டணி அரசியலிலே ஓரத்திலேயே உள்ளனர். (ஜார்கண்ட் மாநிலத்தில் இதுவரை ஆட்சிக்கு வந்த எல்லா கூட்டணிகளும் பழங்குடியினர் தலைமை தாங்கிய, மற்றும் பெருவாரியாக இருந்த அரசுகள் தான்: இதற்கு விதி விலக்கு; அதை ஆராய போனால், முக்கிய விஷயம் விட்டு போய் விடும்.)

இது இன்று நேற்று வந்த நிலை அல்ல: அரசியல் சட்டம் எழுதப்படும் போதும் கிட்டத்தட்ட பழங்குடியினர் மறக்கப் பட்டனர்; சரியான சமயத்தில், சரியான விதத்தில் பேசி இட ஒதுக்கீடு கிடைக்க செய்தவர் ஜெயபால் முண்டா.. ஆனால், அதன் பின் அவர்களை மறந்து விட்டோம். இப்போதாவது மீண்டும் நினைப்போம். இதற்கு பொருள், சில கோடிகளை விட்டெறிவோம் என்பதல்ல. தலை முறை தலை முறையாக வந்த பழங்குடியினரின் உரிமைகளை அங்கீகரித்து, அவர்களுக்கும், ஆட்சியில் , பொருளாதாரத்தில் சக்தி வழங்குவதே நாம் செய்ய வேண்டியது.

கிழக்கிலும், மத்தியிலும் தெற்கிலும் இந்த ஆதிவாசிகளின் உறைவிடம் தான் கனிம, வன வளங்கள் நிறைந்ததாய் இருப்பது பிரச்னையை சிக்கலாக்குகிறது பெருமளவு நிலம் கையகப் படுத்தப் பட்டு, வேறு இனத்தவர் குடியேறுவது, சுரங்க மாபியாக்கள், ஊழல் அரசு அதிகாரிகள், வன வளங்கள் மேல் வைத்திருக்கும் கட்டுப்பாடு, இவற்றால், பழங்குடியினரை அவர்களின் இருப்பிடத்திலேயே அன்னியர் ஆக்கி விட்டது.

ஒரு நல்ல காரியம் 2006 ல் இயற்றப்பட்ட வன உரிமைகள் சட்டம். ஆனால் அது நடை முறைப் படுத்துவதிலும் தடைகள்; ஓட்டைகள். . இந்த ஆண்டு பிப்ரவரி வரை வந்த உரிமை கோரும் விண்ணப்பங்கள்: 27 லட்சம்; . ஒப்புக் கொள்ளப் பட்டவை : 7.60 லட்சம் ; நிராகரிப்பட்டவை : 9.30 லட்சம் ;; முடிவு எடுக்காமல் நிலுவையில் உள்ளவை : 10.10 லட்சம். சமூக உரிமைகளுக்கு சட்ட உருவம் கொடுப்பதிலும், கூட்டு மேலாண்மை நிறுவுவதிலும் நடை முறை சிக்கல்கள் உள்ளன.

அவர்களுக்கு சொந்தமான இடத்தில் கிடைக்கும் இயற்கை வளங்களின் மேல் அவர்களுக்கு உள்ள உரிமையை நாம் அங்கீகரிக்கவில்லை; மேம்பாடு, முன்னேற்றம் என்ற பெயரில் அவர்களின் நிலம் கையகப்படுத்தப்படுகிறது, ஈட்டுத் தொகை வழங்குகிறோம்; ஆனால், அங்கு கிடைக்கும் பொருள்களின் விலையில் அவர்களுக்கு பங்கு கிடைப்பது இல்லை;! ( மாபியாக்களுக்கும், ஊழல் அரசு அதிகாரிகளுக்கும் பின் வழியாக பங்கு போய் விடுகிறது என்பது உண்மை நிலை).
தலைமுறை தலைமுறையாக ஓரிடத்தில் இருக்கும் பழங்குடியினை இடம் பெயர்த்துவதில் ஏதோ ஒரு குறை உள்ளது அல்லவா? அவர்களை அத்து மீறி குடிசை போட்ட சேரியினரைப் போல நடத்துகிறோம். அமெரிக்காவில் வெள்ளையர்கள் அமெரிக்க நிலத்தில் காலம் காலமாக இருந்து வந்த பழங்குடியினருக்கு உரிமை மறுத்து, அவர்களின் வனங்களை கையகப்படுத்தினர் என்று சரித்திரம் சொல்லும்.

இந்தியாவில் உள்ள ஆதிவாசியினர் பல தலைமுறைகளாக கோலோச்சியவர்கள்; அவர்களில் சிற்றசர்கள் இருந்தனர்; அவர்கள் வெள்ளையரை எதிர்த்து கலகம் செய்தது வரலாறு: உதாரணம்: சாந்தாளர்கள்; மற்றும் அல்லூரி சீதா ராம ராஜூ. முதலியானோர். அவர்களுக்கு சொந்தமான இடத்தில் அவர்களே அரசு செய்யும் ஒரு முறை இயற்ற/ஏற்க வேண்டும்.
ஆதிவாசிகள் இந்து சமுதாயத்தில் ஒதுக்கப் பட்டு வசித்த தலித்துக்கள் அல்லர்; அவர்கள் இந்து சமுதாயத்துக்கு வெளியில் இருந்தவர்; சாதி இந்துகளுக்கு சமமாக நடத்தப்பட்டவர்கள்; புராணக் கதைகளில் இதற்கு, பல ஆதாரங்கள் உண்டு; உதாரணமாக, வால்மீகி ஒரு பழங்குடியினர் . ; இராமாயண காதையில் வரும் சபரி ஒரு ஆதிவாசி; மகா பாரத்தில் ஏகலைவன். (அல்லி கூட அப்படித்தான் என நினைக்கிறேன்).

பழங்குடியினருக்கு மானியம் வேண்டாம்; அவர்களுக்கு தர வேண்டியது அவர்களுக்கு உரித்தான சமூக அந்தஸ்தும், உரிமைகளும்;

Monday, April 12, 2010

யாதும் ஊரே யாவரும் கேளிர் : கணியன் பூங்குன்றனார்

www.ponnusamypalani.blogspot.com/2010/04/blog-post
" தண்டகாரண்யம்: இந்திய தேசியம் பேசினால் செருப்பால் அடிப்பேண்டா"
என்ற பதிவு கண்டு நான் அனுப்பிய பின்னூட்டம்:

பழங்குடி மக்களின் வாழ்வாதாரம் ஒரு சேர ஒழிந்துவிடும் என்பதால் தண்டகாரண்யத்தில் கனிம சுரங்கங்கள் கூடாது என்பது புரிகிறது. ஒரு கோணத்தில் நியாயமும் கூட.
ஆனால், இந்த பிரச்னையில் இன்னொரு கோணம் உள்ளது. (வெளி நாட்டு சுரண்டல் பற்றி நான் கூறவில்லை).
இரும்பு, தங்கம், வெள்ளி, தாமிரம், கந்தகம், போன்ற கனிமங்கள் நிலத்திற்கு அடியில் இருந்து, சுரங்கம் அமைத்து, எடுத்து, பல்வேறு முறைகளில் பயன் படுத்துவது பல நூறு, அல்ல ஆயிரம் ஆண்டுகளாக வருகின்ற நடைமுறையே. இது போல் நடந்த கால கட்டங்களில் அந்த பழங்குடியினர் ஒன்று குடி பெயர்ந்து வேறு காடுகளில் குடியேறி இருக்க வேண்டும்; அல்லது, பொது சமுதாயத்தில் கலந்திருக்க வேண்டும். (நம் முன்னோர் அவ்வாறே வந்தவர்களாக இருக்கலாம்.)
சரியோ தவறோ, உலகம் முழுதும் "நவீன வாழ்வு " முறை வந்து விட்டது. கனிமங்கள் இருக்கும் போது, அதை பயன் படுத்தவே எந்த ஒரு அரசும் எத்தனிக்கும். (இதில் பன்னாட்டு நிறுவனகள் இல்லாவிடினும், இது நடந்தே தீரும்.)
ஒவ்வொரு நாட்டிலும் வேறு வேறு கனிம வளங்கள் உள்ளன: சிலியில் கந்தகம், மைய கிழக்கு நாடுகளில் எண்ணெய், தென் ஆப்ரிக்காவில் தங்கம், வைரம், என உள்ளது நாம் அறிந்ததே; அங்கும் வனப் பகுதியில் சிறிது காலத்திற்கு முன்போ, அல்லது நீண்ட காலத்திற்கு முன்போ, வனமும், பழங்குடிகளும் இருந்திருக்க வேண்டும். ( எனக்கு உலக சரித்திரம் பெரிய அளவுக்கு தெரியாது; இது தவறு என்றால் சரியான நிலை கூறவேண்டும் எனக் கேட்டுக்கொள்கிறேன்).
தண்டகாரண்யத்தில் வசிக்காத "பிற" "இந்தியர்கள்" கனிம வளங்களை பயன் படுத்தாமல் தொழில் வளர்ச்சி பாதிப்பு, பிற நாடுகளிலுருந்து இறக்குமதி, அந்நிய செலாவணி என்று ரீல் விடுவார்கள்.
இதனால், என் சிற்றறிவுக்கு எட்டியவரை, பழங்குடியினருக்கு மிகவும் பாதிப்பு இல்லாமல், சுரங்கம் அமைத்தல்; அல்லது, அவர்களை குடி பெயர்த்து, சரியான வாழ்வு முறைக்கு வழி வகுத்தல் என்று சரியாக திட்டம் தீட்டி, அருந்ததி ராய், மேதா பாடகர் முதலிய பொது நல விரும்பிகளின் அங்கீகாரத்துடன் பணி மேற்கொள்வது சரியாக இருக்கலாம்.

Tuesday, February 9, 2010

வேலை வாய்ப்பில் ஒதுக்கீடு முறையினால் என்ன பயன் ?

யாதும் ஊரே யாவரும் கேளிர் : கணியன் பூங்குன்றனார்

ஒதுக்கீடு முறையினால் என்ன பயன்?

பல்லவன் பேருந்துகளில் முன் பகுதியில் இருக்கும் இருக்கை " உடல் ஊனமுற்றவர்க்கு " என இருக்கும். அதாவது, பேருந்து நிறுத்தத்தில் கூட்டத்தில் இடிபட்டு, எப்படியோ வர முடிந்த ஊனமுற்றோருக்கு உள்ளே வந்த உடன் அந்த இருக்கை அளிக்கப்படும். ஆனால், அவர்களைக் கேட்டுப் பாருங்கள்; அவர்கள் சொல்லுவார்கள்: எங்களுக்கு பேருந்தில் ஏறி உள்ளே வருவது தான் மிகச் சிரமமான காரியம். அதற்கு தான் எங்களுக்கு முன் உரிமை வேண்டும். உள்ளே வந்து விட்டால், உட்கார எங்களுக்கு முன் உரிமை இல்லாவிட்டால் பரவாயில்லை என்பர்.
அதாவது, அவர்கள் கல்வி கற்க உதவி செய்தால், முன் உரிமை அளித்தால், தானாகவே வேலையும் தேடிக் கொள்ள முடியும். இன்ன பிற வழிகளையும் தேடிக் கொள்வர்.

நம் நாட்டில் உயர் கல்வியில் வேலையில் தரப்படும் ஒதுக்கீட்டை விட, அவர்களுக்கு, ஆரம்பக் கல்வியிலும், நடுநிலைப் பள்ளியிலும் ஒதுக்கீடு இல்லை -- அனைத்து வசதிகளும் விடுதி, உணவு, உடை, கொடுத்து, படிக்க வைக்க வேண்டும். இது தாழ்த்தப்பட்டவர்களுக்கு முற்றும் பொருந்தும்.
அறுபதுகளில் மற்றும் எழுபதுகளில் துவங்கப் பட்ட தாழ்த்தப்பட்ட மாணவர் விடுதிகள் பார்த்து இருக்கிறேன். அது போல் மிக அதிக எண்ணிக்கையில் கடந்த முப்பது ஆண்டுகளில் வந்துள்ளனவா என தெரியவில்லை. அரசு கவனம் உயர் கல்வியைப் பற்றியே அதிகம் இருப்பது அனாவசியம். அவர்கள் ஒவ்வொரு தாலுக்காவிலும் தாழ்த்தப்பட்டவர்க்கு மாணவர் விடுதி அமைத்து அவர்களுக்கு அரசுப் பள்ளிகள் தான் என்றில்லாமல்,நல்ல பள்ளிகளில் சேர்த்து, அவர்களுக்கு டியூஷன் கூட எடுத்து, அவர்கள் நல்ல மதிப்பெண் பெற்று தேற வகை செய்ய வேண்டும்.. பின்னர் அவர்கள் என்ன படிக்க விரும்புகிறார்களோ அதற்கு உதவ வேண்டும்.

ஏதோ அரசியல் நிர்ணயச் சட்டத்தில் உள்ளது என்று பதினைந்து சதவீதம் ஒதுக்கீடு எல்லா மட்டங்களிலும் அறிவிப்பு செய்தால் போதாது.

சொல்லப் போனால், தாழ்த்தப் பட்ட இனத்தவர் வீட்டில், குழந்தை பிறந்தவுடன் அரசு தத்து எடுத்துக் கொண்டு, அக்குழந்தை வளர ஊட்டமான சத்து உணவு அல்லது பேணி பராமரிபாதர்கேன்று மானியம் கொடுத்து வர வேண்டும்; அவர்கள் பள்ளிக்கு போகும் வயது வந்த உடன், விடுதிகளில் வைத்து பராமரித்து கல்விக்கு முன் உரிமை கொடுத்து அவர்களை கல்வியில் ஒளிரச் செய்யவேண்டும்.

இது போல் ஓரிரண்டு தலைமுறைக்கு செய்து விட்டால் மூன்றாம் தலைமுறை எங்களுக்கு ஒதுக்கீடு வேண்டாம் என அறிவிக்கும் என்பது என் கனா.

Sunday, February 7, 2010

நான் இட்ட ஒரு பின்னூட்டம்

Pl see: Thiruchchikkaaran's blog in Wordpress.com
ina veri + mozhi veri+ bal theckeray


இந்த தலைப்பு இந்தியர்கள் அனைவருக்கும் ஆர்வம் உள்ளது என்றாலும், வெளி மாநிலத்தில் உள்ள என்போன்றவர்களுக்கும், வெளி நாடுகளில் பணி புரியும் தமிழர்களுக்கும், தமிழ் நாட்டில் உள்ள பிற மொழி, பிராந்திய வர்களுக்கும் குறிப்பாக ஆர்வம் உள்ள விஷயம்.

அரசு வேலைகள் என்றில்லை, semi-skilled மற்றும் unskilled வேலைகளுக்கு கூட வெளி மாநிலத்தவர் வந்தால் தாக்கரேக்கள் சீறுவது -- மன்னிக்கவும் -- நியாயமோ எனத் தோன்றுகிறது. இது பல நூற்றாண்டுகளாக நடந்து வருவது தான். ஆனால் விடுதலைக்குப் பின் unskilled வேலைகளுக்கு கூட இன்னொரு மாநிலத்திற்கு செய்யும் அளவு சொந்த மாநில நிலை இருப்பது பரிதாபம். சிற்றுந்தி ஓட்டுனர் வேலைக்கு துபாய் செல்லும் மலையாளிகள், தமிழர்கள் போலே தான். (இல்லை என்றால் வடிவேலு பார்த்திபன் கூட வரும் படத்தில் சொல்லும் வேலை : கக்கூசு கழுவுவது ). அந்த நாடுகளிலே மக்கள் தொகை குறைவாக இருக்கும் பொது இதை ஏற்றுக்கொள்ளுபவர்கள், உள்ளூரில் இந்த தொழிலை செய்வதற்கு நபர்கள் இருக்கும் பொது வேற்று மாநிலத்தவர்கள், நாட்டவர்கள் வருவதால், ஒன்று கூலிகள்/சம்பளம் குறைகிறது; ( கீழ்வெண்மணி ) அல்லது உள்ளூர் காரர்களுக்கு வேலை இல்லா திண்டாட்டம் . தாக்கரேயும் ரிசர்வ் பேங்க் கவர்னர் தம் மாநிலத்தவர் இல்லை என்று சொல்லவில்லை; டாக்சி ஓட்டுபவர்கள், முடி திருத்துபவர்கள், சாலை தொழிலாளர்கள் பீகார், ஜார்கண்ட், உத்தர் பிரதேஷ் முதலிய மாநிலத்திலிருந்து வந்து, தம் ஊரில் உள்ள சமூதாயத்தில் கீழ் நிலையில் உள்ளவர்களுக்கு இடைஞ்சல் என்று சொல்வதில் பெரும் தவறு இல்லை; அவர் சொல்லும் விதம், எரியும் கல் தான் வலியை ஏற்படுத்துகிறது. இதனால் மராட்டிக் காரர்களுக்கு பொருள் ஈட்டும் வாய்ப்புகள் குறைந்து உள்ளது கண்கூடு. பொருள் ஈட்டும் நிமித்தம் வேற்று ஊர்களுக்கு, மாநிலங்களுக்கு, நாட்டிற்கு, கண்டத்திற்கு செல்வது வட இந்தியர் ( ஆப்ரிகா, பிஜி, யு.கே, அமெரிக்கா மேற்கு இந்திய தீவுகள், மௌரீஷியஸ்), சர்தார்ஜி / பஞ்சாபிகள் : லண்டன், கனடா, தமிழர்: இலங்கை, மலேய, பர்மா, விஎட்நாம், தென் ஆப்ரிகா, மேற்கு இந்திய தீவுகள், மௌரீஷியஸ்,; ஒரியாக் காரர்கள் : இலங்கை; எனப் போயிருந்தபோதும் மாராட்டியர்கள் பெரும் எண்ணிக்கையில் போகவில்லை என நினைக்கிறேன்; அதாவது பொருள் ஈட்டுவதற்காக தொலை தூரம் செல்லும் வழக்கம் அவர்களிடம் ரத்தத்தில் இல்லை எனக் கொள்ளலாம்.
சரி' இப்போது என்ன செய்யலாம் ?
1. வேற்று மாநில அரசுகள் தம் மாநிலத்திலேயே வேலை வாய்ப்புகள் அதிகரிக்க உருப்படியான முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும்.
2. மும்பையில் சாலைகள், வீட்டு வசதி, குடி நீர், கழிவு போன்ற கட்டமைப்புகள் இவர்கள் அங்கு வந்து குடியேறுவதால் பிரச்னைகளை ஏற்படுத்துகிறது; ஆகவே, அவர்கள் (பீகார், உத்தர் பிரதேஷ், அரசுகள் மராட்டி மாநிலத்திற்கு மானியம் வழங்க வேண்டும்.
3. ஒரு குறிப்பிட்ட அளவு ஊதியத்திற்கு கீழே வெளி மாநிலத்திவர்களை வேலைக்கு எடுத்துக்கொள்ள கூடாது என சட்டம் செய்வதில் தவறு இல்லை.
4. வரி விலக்குகள் முதலியவை வழங்கி எதிர் காலத்தில் தொழில்கள் வேறு பகுதிகளில் தொடங்க மைய அரசு வகைசெய்ய வேண்டும்.



திருசிசிக்காரன் ப்லொக்கில் இட்ட பதிவுக்கு என் பின்னூட்டம்;



காண்க: www.

Friday, January 1, 2010

யாதும் ஊரே யாவரும் கேளிர் : கணியன் பூங்குன்றனார்

http://thamilislam.blogspot.com/2009/12/67.html

என்ற வலைத் தளத்தில் பதிவு : "மொஹரம் ஊர்வலத்தில் தற்கொலை தாக்குதல் : 67 பேர் பலி. " கண்டு, ஒரு பின்னூட்டம் அனுப்பினேன்.

நான் அனுப்பிய பின்னூட்டம்:

//முஸ்லிம்கள் கொஞ்சம் சகிப்புத்தன்மையை வளர்த்துக்கொள்ள வேண்டும். தம் இஸ்லாம் மதத்திற்குள்ளேயே வேற்று ஒரு பிரிவை சுன்னி பிரிவினர் பொறுத்துக் கொள்ளாமல் தாக்கினால் , வேற்று மதத்தினரை எவ்வாறு சகித்துக் கொள்வார்கள்? உலகத்தில், பல மதங்கள், பிரிவுகள், இனங்கள், மொழிகள், சேர்ந்து வாழ வேண்டிய கட்டாயம் வந்து விட்டது. அனைவரும், இறை உணர்வு பெற்று இருக்க வேண்டும், வீடுபேறு அடைய வேண்டும், என்று நினைப்பது நல்லதே . ஆனால் அவர்கள் அனைவரும் எம்மைப் போன்ற மத வழியையே பின்பற்ற வேண்டும் என நினைப்பது சரியல்லவே? இஸ்லாமிய முறையில், நல்ல கருத்துக்கள் கண்டு, மத மாற்றம் செய்து, கி.பி. ஏழாம் நூற்றாண்டில் இருந்து, சமீப காலம் வரை, ஐரோப்பாவிலும், ஆப்ரிக்காவிலும் ஆசியாவிலும் முஸ்லிம் ஆகியவர்கள் கோடிக்கணக்கில் உள்ளனர். இந்த காலக் கட்டத்தில், பொருளாதாரக் காரணங்களே மனிதர்களின் வாழ்வில் பெரும் பங்கு வகிக்கிறது; இறை நம்பிக்கை அல்ல என்பதே வருத்தப் பட வைக்கும் உண்மை.எனவே , இஸ்லாமியர் இடையே பிற பிரிவு சகிப்புத்தன்மை, பிற நம்பிக்கை சகிப்புத்தன்மை, பெரிய அளவில் துவங்க வேண்டும். வேற்று நம்பிக்கை மனிதர்களை, வெடி குண்டு போட்டு களைந்தெடுப்போம் என எண்ணுதல் இறைவனின் மன்னிப்பு பெறாது. (இதை ஜிஹாத் எனவே பொது மன்னிப்பு உண்டு எனக் கருதுவது சரி அல்ல அல்லவா?)இந்த கருத்தை பல ஆண்டுகளாக முஸ்லிம்களுக்கு சொல்ல வேண்டும் என நினைத்துக் கொண்டிருக்கிறார்கள்; இப்போது ப்ளாக் உலகு இதை நேருக்கு நேர் இல்லாமல், மனம் புண் படாமல் சொல்ல வாய்ப்பு தருகிறது. தயவு செய்து, இந்த கருத்தை இந்த வலைப்பதிவைக் காணும் அனைத்து நம்பிக்கையாளர்களும் படித்து, இந்த கருத்து பரவலாக ஒப்புக் கொள்ளப் பட வேண்டும் என முயல வேண்டும். கூடி வாழ்ந்தால் கோடி நன்மை.//

இது வரை வேறு பின்னூட்டங்கள் எதுவும் வரவில்லை.

என் வலைப் பின்பற்றுபவர்கள் அதிகம் இல்லை.
காண்பவர் தங்கள் எண்ணங்களை பகிர்ந்து கொள்ள கேட்டுக்கொள்கிறேன்.