யாதும் ஊரே யாவரும் கேளிர் : கணியன் பூங்குன்றனார்
ஒதுக்கீடு முறையினால் என்ன பயன்?
பல்லவன் பேருந்துகளில் முன் பகுதியில் இருக்கும் இருக்கை " உடல் ஊனமுற்றவர்க்கு " என இருக்கும். அதாவது, பேருந்து நிறுத்தத்தில் கூட்டத்தில் இடிபட்டு, எப்படியோ வர முடிந்த ஊனமுற்றோருக்கு உள்ளே வந்த உடன் அந்த இருக்கை அளிக்கப்படும். ஆனால், அவர்களைக் கேட்டுப் பாருங்கள்; அவர்கள் சொல்லுவார்கள்: எங்களுக்கு பேருந்தில் ஏறி உள்ளே வருவது தான் மிகச் சிரமமான காரியம். அதற்கு தான் எங்களுக்கு முன் உரிமை வேண்டும். உள்ளே வந்து விட்டால், உட்கார எங்களுக்கு முன் உரிமை இல்லாவிட்டால் பரவாயில்லை என்பர்.
அதாவது, அவர்கள் கல்வி கற்க உதவி செய்தால், முன் உரிமை அளித்தால், தானாகவே வேலையும் தேடிக் கொள்ள முடியும். இன்ன பிற வழிகளையும் தேடிக் கொள்வர்.
நம் நாட்டில் உயர் கல்வியில் வேலையில் தரப்படும் ஒதுக்கீட்டை விட, அவர்களுக்கு, ஆரம்பக் கல்வியிலும், நடுநிலைப் பள்ளியிலும் ஒதுக்கீடு இல்லை -- அனைத்து வசதிகளும் விடுதி, உணவு, உடை, கொடுத்து, படிக்க வைக்க வேண்டும். இது தாழ்த்தப்பட்டவர்களுக்கு முற்றும் பொருந்தும்.
அறுபதுகளில் மற்றும் எழுபதுகளில் துவங்கப் பட்ட தாழ்த்தப்பட்ட மாணவர் விடுதிகள் பார்த்து இருக்கிறேன். அது போல் மிக அதிக எண்ணிக்கையில் கடந்த முப்பது ஆண்டுகளில் வந்துள்ளனவா என தெரியவில்லை. அரசு கவனம் உயர் கல்வியைப் பற்றியே அதிகம் இருப்பது அனாவசியம். அவர்கள் ஒவ்வொரு தாலுக்காவிலும் தாழ்த்தப்பட்டவர்க்கு மாணவர் விடுதி அமைத்து அவர்களுக்கு அரசுப் பள்ளிகள் தான் என்றில்லாமல்,நல்ல பள்ளிகளில் சேர்த்து, அவர்களுக்கு டியூஷன் கூட எடுத்து, அவர்கள் நல்ல மதிப்பெண் பெற்று தேற வகை செய்ய வேண்டும்.. பின்னர் அவர்கள் என்ன படிக்க விரும்புகிறார்களோ அதற்கு உதவ வேண்டும்.
ஏதோ அரசியல் நிர்ணயச் சட்டத்தில் உள்ளது என்று பதினைந்து சதவீதம் ஒதுக்கீடு எல்லா மட்டங்களிலும் அறிவிப்பு செய்தால் போதாது.
சொல்லப் போனால், தாழ்த்தப் பட்ட இனத்தவர் வீட்டில், குழந்தை பிறந்தவுடன் அரசு தத்து எடுத்துக் கொண்டு, அக்குழந்தை வளர ஊட்டமான சத்து உணவு அல்லது பேணி பராமரிபாதர்கேன்று மானியம் கொடுத்து வர வேண்டும்; அவர்கள் பள்ளிக்கு போகும் வயது வந்த உடன், விடுதிகளில் வைத்து பராமரித்து கல்விக்கு முன் உரிமை கொடுத்து அவர்களை கல்வியில் ஒளிரச் செய்யவேண்டும்.
இது போல் ஓரிரண்டு தலைமுறைக்கு செய்து விட்டால் மூன்றாம் தலைமுறை எங்களுக்கு ஒதுக்கீடு வேண்டாம் என அறிவிக்கும் என்பது என் கனா.
Tuesday, February 9, 2010
Subscribe to:
Post Comments (Atom)
. //அரசு கவனம் உயர் கல்வியைப் பற்றியே அதிகம் இருப்பது அனாவசியம். அவர்கள் ஒவ்வொரு தாலுக்காவிலும் தாழ்த்தப்பட்டவர்க்கு மாணவர் விடுதி அமைத்து அவர்களுக்கு அரசுப் பள்ளிகள் தான் என்றில்லாமல்,நல்ல பள்ளிகளில் சேர்த்து, அவர்களுக்கு டியூஷன் கூட எடுத்து, அவர்கள் நல்ல மதிப்பெண் பெற்று தேற வகை செய்ய வேண்டும்.. பின்னர் அவர்கள் என்ன படிக்க விரும்புகிறார்களோ அதற்கு உதவ வேண்டும்.//
ReplyDeleteஉண்மையான அக்கறையோடு சொல்லி இருக்கீங்க நெற்குப்பைத்தும்பி .. உங்கள் எண்ணங்களை அரசு பரிசீலனக்கு எடுத்துக் கொள்ளலாம்... அவ்வளவு அருமை..
நல்ல கருத்து...
ReplyDeleteநன்றி.