Sunday, February 7, 2010

நான் இட்ட ஒரு பின்னூட்டம்

Pl see: Thiruchchikkaaran's blog in Wordpress.com
ina veri + mozhi veri+ bal theckeray


இந்த தலைப்பு இந்தியர்கள் அனைவருக்கும் ஆர்வம் உள்ளது என்றாலும், வெளி மாநிலத்தில் உள்ள என்போன்றவர்களுக்கும், வெளி நாடுகளில் பணி புரியும் தமிழர்களுக்கும், தமிழ் நாட்டில் உள்ள பிற மொழி, பிராந்திய வர்களுக்கும் குறிப்பாக ஆர்வம் உள்ள விஷயம்.

அரசு வேலைகள் என்றில்லை, semi-skilled மற்றும் unskilled வேலைகளுக்கு கூட வெளி மாநிலத்தவர் வந்தால் தாக்கரேக்கள் சீறுவது -- மன்னிக்கவும் -- நியாயமோ எனத் தோன்றுகிறது. இது பல நூற்றாண்டுகளாக நடந்து வருவது தான். ஆனால் விடுதலைக்குப் பின் unskilled வேலைகளுக்கு கூட இன்னொரு மாநிலத்திற்கு செய்யும் அளவு சொந்த மாநில நிலை இருப்பது பரிதாபம். சிற்றுந்தி ஓட்டுனர் வேலைக்கு துபாய் செல்லும் மலையாளிகள், தமிழர்கள் போலே தான். (இல்லை என்றால் வடிவேலு பார்த்திபன் கூட வரும் படத்தில் சொல்லும் வேலை : கக்கூசு கழுவுவது ). அந்த நாடுகளிலே மக்கள் தொகை குறைவாக இருக்கும் பொது இதை ஏற்றுக்கொள்ளுபவர்கள், உள்ளூரில் இந்த தொழிலை செய்வதற்கு நபர்கள் இருக்கும் பொது வேற்று மாநிலத்தவர்கள், நாட்டவர்கள் வருவதால், ஒன்று கூலிகள்/சம்பளம் குறைகிறது; ( கீழ்வெண்மணி ) அல்லது உள்ளூர் காரர்களுக்கு வேலை இல்லா திண்டாட்டம் . தாக்கரேயும் ரிசர்வ் பேங்க் கவர்னர் தம் மாநிலத்தவர் இல்லை என்று சொல்லவில்லை; டாக்சி ஓட்டுபவர்கள், முடி திருத்துபவர்கள், சாலை தொழிலாளர்கள் பீகார், ஜார்கண்ட், உத்தர் பிரதேஷ் முதலிய மாநிலத்திலிருந்து வந்து, தம் ஊரில் உள்ள சமூதாயத்தில் கீழ் நிலையில் உள்ளவர்களுக்கு இடைஞ்சல் என்று சொல்வதில் பெரும் தவறு இல்லை; அவர் சொல்லும் விதம், எரியும் கல் தான் வலியை ஏற்படுத்துகிறது. இதனால் மராட்டிக் காரர்களுக்கு பொருள் ஈட்டும் வாய்ப்புகள் குறைந்து உள்ளது கண்கூடு. பொருள் ஈட்டும் நிமித்தம் வேற்று ஊர்களுக்கு, மாநிலங்களுக்கு, நாட்டிற்கு, கண்டத்திற்கு செல்வது வட இந்தியர் ( ஆப்ரிகா, பிஜி, யு.கே, அமெரிக்கா மேற்கு இந்திய தீவுகள், மௌரீஷியஸ்), சர்தார்ஜி / பஞ்சாபிகள் : லண்டன், கனடா, தமிழர்: இலங்கை, மலேய, பர்மா, விஎட்நாம், தென் ஆப்ரிகா, மேற்கு இந்திய தீவுகள், மௌரீஷியஸ்,; ஒரியாக் காரர்கள் : இலங்கை; எனப் போயிருந்தபோதும் மாராட்டியர்கள் பெரும் எண்ணிக்கையில் போகவில்லை என நினைக்கிறேன்; அதாவது பொருள் ஈட்டுவதற்காக தொலை தூரம் செல்லும் வழக்கம் அவர்களிடம் ரத்தத்தில் இல்லை எனக் கொள்ளலாம்.
சரி' இப்போது என்ன செய்யலாம் ?
1. வேற்று மாநில அரசுகள் தம் மாநிலத்திலேயே வேலை வாய்ப்புகள் அதிகரிக்க உருப்படியான முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும்.
2. மும்பையில் சாலைகள், வீட்டு வசதி, குடி நீர், கழிவு போன்ற கட்டமைப்புகள் இவர்கள் அங்கு வந்து குடியேறுவதால் பிரச்னைகளை ஏற்படுத்துகிறது; ஆகவே, அவர்கள் (பீகார், உத்தர் பிரதேஷ், அரசுகள் மராட்டி மாநிலத்திற்கு மானியம் வழங்க வேண்டும்.
3. ஒரு குறிப்பிட்ட அளவு ஊதியத்திற்கு கீழே வெளி மாநிலத்திவர்களை வேலைக்கு எடுத்துக்கொள்ள கூடாது என சட்டம் செய்வதில் தவறு இல்லை.
4. வரி விலக்குகள் முதலியவை வழங்கி எதிர் காலத்தில் தொழில்கள் வேறு பகுதிகளில் தொடங்க மைய அரசு வகைசெய்ய வேண்டும்.திருசிசிக்காரன் ப்லொக்கில் இட்ட பதிவுக்கு என் பின்னூட்டம்;காண்க: www.

1 comment:

 1. அன்புள்ள ஐயா!

  உங்கள் கருத்துக்கள் மிகவும் நியாயமானவையே!

  இந்தியாவில் மற்ற எல்லாவற்றையும் போலவே "தேசிய ஒருமைப்பாட்டு கூக்குரல்களும்" போலியானவையே என்று தோன்றுகிறது.

  தேசிய கட்சிகள் என்றும் தம்மைத் தானே கருதிக்கொள்ளும் கட்சிகளும் அவற்றின் தலைவர்களும் மாநிலத்திற்கு மாநிலம் ஒவ்வொரு வேடமிடும் பச்சோந்திகளாகவே இருக்கின்றனர்.

  சமீபத்திய உதாரணம், ராகுல் காந்தியின் சமீபத்திய பீகார் பிரச்சாரங்கள். அந்த மாநிலத்தில் சில தொகுதிகள் கூடுதலாக பெறவேண்டும் என்ற ஒரே காரணத்திற்க்காக அவர் கையாள விரும்புகின்ற உத்தி "பிரிவினை கருத்துக்கள் அதிகம் இல்லாத தேசிய பாதுகாப்பு படையிலும் மாநில அடையாளங்களை புகுத்துதல்". மும்பையை காப்பாற்றியது "உத்திர பிரதேச மற்றும் பீகார் மாநிலங்களை சேர்ந்த வீரர்களே" என்று கூறி ஒரு புதியவகை பிரிவினை வாதத்தை தொடங்கி வைத்திருக்கிறார். அவருடைய இந்த பேச்சுக்கு பெரிய அளவில் எதிர்ப்பு கிளம்பாதது வருத்தத்துக்குரிய ஒன்றாகும். இனிமேல் ஒருமாநிலத்தில் கலவரங்கள் நடக்கும் போது அதை அடக்க எந்த மாநிலத்தைச் சார்ந்த "தேசிய படைவீரர்கள் வருகின்றனர்" என்பதும் கூர்மையாக கவனிக்கப் பட்டால் பிரிவினைவாதங்கள் மேலும் வலுபெற வாய்ப்புள்ளதல்லவா?

  நம்மூர் பாமாகவைப் போலவே சிவசேனாவும் அவ்வப்போது நல்ல கருத்துக்களை கூறினாலும், அவர்களுடைய நம்பகத்தன்மை குறைவாக உள்ளதானால் மக்கள் அவற்றை முழுமையாக புறக்கணிக்கின்றனர். ஆனால் இவர்களை விட அதிக ஆபத்தானவர்கள் ராகுல் காந்தி போன்ற "பச்சோந்தி தேசியவாதிகள்" என்பதையும் யாரும் மறந்துவிடக்கூடாது. ஏனென்றால் கெட்டவர்கள் என்று தெரிந்தால் எளிதாக ஒதுங்கி விடலாம். நல்லவர்கள் போல நாடகமாடுபவர்களிடம் இருந்து காப்பாற்றிக் கொள்பவது மிகவும் கடினமான காரியம்.

  நன்றி.

  ReplyDelete