Monday, June 28, 2010

பார்க்க:
விமரிசனம் : காவேரி மைந்தன்: ஒன்றும் எழுத வேண்டாம் என்று தான் நினைத்தேன் …தமிழச்சி எழுத வைத்து விட்டார்
http://vimarisanam.wordpress.com/2010/06/26/%e0%ae%92%e0%ae%a9%e0%af%8d%e0%ae%b1%e0%af%81%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%8e%e0%ae%b4%e0%af%81%e0%ae%a4-%e0%ae%b5%e0%af%87%e0%ae%a3%e0%af%8d%e0%ae%9f%e0%ae%be%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%8e%e0%ae%a9/#comment-150


உங்கள் பதிவின் சாரம் தெளிவு.
அப்படிப் பார்த்தால் தமிழச்சி மட்டுமல்ல, வாலி முதற்கொண்டு அத்துணை "கவிஞர்கள்" படித்த கவனங்களிலும் ( "கவிதை" என்பதே தமிழ் இல்லை என்கிறீர்கள்!) பிற மொழி சொற்கள் மிகுந்தே உள்ளன. கவி வட மொழி சொல் என்னும்போது கவி அரங்கம் எப்படி?
ஆனால் ஒன்று சொல்ல வேண்டும்: சில சொற்கள் தமிழிலிருந்தும் வட மொழிக்கு சென்றிருக்கின்றன என நான் கருதுகிறேன். உதாரணம் : நீர், மீன், முதலிய சொற்கள் வட மொழியில் இருந்தாலும் அவை தமிழில் முதலில் வந்திருக்க வேண்டும் எனத்தோன்றுகிறது. உலகம் "லோகம்" என்பதிலிருந்து வந்திருக்கலாம் எனத் தோற்றினாலும் இருவழி பயணம் இருந்திருக்கக்கூடும் .
கோடு எந்த இடத்தில் வரைந்து இதற்கு அப்பால் வந்தவை திசை சொற்கள் என எந்த காலத்திலும் தெளிவு இல்லை.
பாவம் bhaavam என்றாலும் (முக baavam ), பாவம் (புண்ணியத்துக்கு எதிர்ச்சொல்) இரண்டுமே வட மொழியிலிருந்து வந்தது போல் தெரிகிறது. bhaavam என்பதற்கு மாற்று சொல் இல்லாமலேயே பல நாள் கழித்து விட்டோம்.
கிரீடம், தீர்க்க தரிசி, இதிகாசம், சிலிகான், கோத்திரம், ஜடை ,ரயில் என்ற சொற்களை வேற்று மொழி சொல் என தள்ளி விட்டாலும், உலகம், கவிதை, ஆலயம், பாத்திரம் என்ற சொற்களை அதே போல் தள்ளிவிடுவது எளிது அல்ல. அவற்றுக்கு வேறு சொல் இருந்தாலும் அவை தமிழ் சொற்கள் என ஒரு தலைமுறை நம்பி விட்டது.
முந்தைய நூற்றாண்டுகளில் எப்படியோ தெரியாது; கடந்த நூறு ஆண்டுகளில் அறிவியல் வளர்ச்சியின் காரணமாக தொலை தொடர்பு, ஊடகங்கள், அரசு முறைகள், காரணமாக பலப்பல மொழிகளுடன் தமிழின் interaction மிக பல மடங்கு ஆகிவிட்டது. இந்த கால கட்டத்தில் வேறு மொழி சொற்களை எவ்வாறு எதிர் கொள்வது என தமிழ் அறிஞர்கள் சிந்திக்கவில்லை; சொல்ல வில்லை. வாதிடவில்லை;
இன்னும் வரும் காலத்தில், தனித்தமிழ் என்பது நடைமுறையில் சாத்தியமா* என்றே தெரியவில்லை. குறைந்த பட்சம்* கவிதைகளில் திசை சொற்களை தவிர்த்து எழுத முயலலாம். * குறியிட்ட சொற்கள் தமிழ் சொற்கள் இல்லை தான்; அவற்றுக்கு ஈடான சொல் எனக்கு உடனே தோன்றவில்லை; மன்னிக்கவும்.
நெற்குப்பை தும்பி
http://makaranthapezhai.blogspot.com
.

No comments:

Post a Comment