ISIS கைப்பற்றிய நகரங்களில் ஈட்டிய /பறித்துக்கொண்ட/கொள்ளை அடித்த/ மாமூல் வசூலித்த ரொக்கம்,சொத்து விவரங்கள் :
மொசுல் நகரத்தைக் கைப்பற்றிய ISIS (இப்போது இஸ்லாமிய காலிபேட்) இராக் அரசுக்கு சொந்தமான ஐந்து ஹெலிகாப்டர்களை தன வசம் எடுத்துக் கொண்டது. போரில் வென்றவர் தோற்றவரின் உடைமைகளை எடுத்துக்கொள்ளும் வழக்கம் நீண்ட காலமாக நடப்பது தான். குற்றமில்லை. அது போன்ற அரசு சொத்துக்கள் தவிர அவர்கள் கைப்பற்றியவை: அந்நாட்டு ரிசர்வ் வங்கியுள் புகுந்து 400 மில்லியன் டாலர்கள்; பிற வங்கிகளுக்குள்ளும் புகுந்து அவற்றின் அலமாரிகளைக் காலி செய்தது. மொத்தம் 85 மில்லியன் டாலர்கள் கொள்ளை என்று இராக்கின் ரிசர்வ் வங்கி கூறியுள்ளது. அங்கு நடந்து கொண்டிருக்கும் பெட் ரோ லியம் சுத்திகரிப்பு ஆலை (பெட்ரோல் டீசல் தயாரிக்கும் நிலையம்) ஒன்றைக் கைப்பற்றியது. சிமென்ட் தொழிற்சாலை ஒன்றையும் கைப்பற்றி உள்ளது. அந்த வழியாகப் போகும் லாரிகள் ஒவ்வொன்றும் 200 டாலர் கட்டவேண்டும் என்பது போன்ற வரி/மாமூல். தாம் இது போல் ஈட்டிய பணத்தைப் போட்டு வைக்க அது கொள்ளை அடித்து மூடிய வங்கியை மீண்டும் திறந்தது.
சுன்னி முஸ்லிம் அல்லாதவர்கள் "மதம் மாறு (அல்லது) ஜெசியா வரி கொடு (அல்லது) செத்துமடி (அல்லது) வெளியேறு" என்ற முழக்கத்தைக் கேட்டு பயந்து இரண்டாயிரம் வருடங்களுக்கு மேலாக அங்கு உள்ள கிறிஸ்துவர்கள் வெளியேறுகிறார்கள். அவர்களிடம் உள்ள பணத்தையும் உடைமைகளையும் பறித்துக்கொள்வதாக செய்தி தாள்கள் கூறுகின்றன.
இதற்கு முன்பு, இது போன்ற இயக்கங்கள் சவூதி போன்ற அரசுகளின் நிதி உதவியைப் பெற்றே தொடர்ந்தன. இந்த காலிபேட் சொந்த மாக நிதி நிலையை வளர்த்துக் கொள்ள திட்டமிட்டு செயலாற்றுகிறது.
அவர்கள் காட்டியுள்ள நீண்ட கால வரைபடத்தில் அந்த காலிபேட்டுககுள் இந்தியாவும் இடம் பெற்று உள்ளது. மத்திய கிழக்கிலிருந்தும் மேற்கிலிருந்தும் கொள்ளை அடிக்க இந்தியா வருவது ஆயிரம் ஆண்டுகளாகப் பார்த்து வருவது தானே. அதனால் தானோ என்னவோ அவர்கள் செய்யும் வேலைகள் பற்றிய விமர்சனம் இங்கு மீடியாவில் இல்லை. ஜமாத்தில் பேசுகிறார்களா என்று தெரியவில்லை. பட்வா ஒன்றும் போட்டதாகத் தகவல் இல்லை.
அவர்கள் வரும் போது பார்த்துக் கொள்ளலாம்.
No comments:
Post a Comment