Thursday, July 1, 2010

ஒரு பின்னூட்டம் : நகரம் நோக்கி குடி பெயரும் ஒரு தொழிலாளி

http://deviyar-illam.blogspot.com/2010/06/blog-post_29.html#comment-form
மிக பயனுள்ள தகவல்களுடன் நல்ல பதிவு. நன்றி

ஒவ்வொரு படியிலும் சிக்கனம் செய்து, உழைப்போருக்கு , சிறு தொழில் செய்வோருக்கு குறைத்துக் கொடுத்து, உருவான பொருள் விற்கும் விலையைக் குறைத்து, மேல் நாட்டு இறக்குமதியாளன் லாபத்தை அதிகமாக்கி ஏற்றுமதி தொழில் மென்மேலும் உயர்கிறது என்றாலும், கருணா போன்ற ஆயிரக்க கணக்கானோர் சிற்றூர்களில் இருந்து
வந்து, நகர் வாழ்வியலையும், தொழில் முறையும் உள்வாங்கி தடம் பதிக்கிறார்கள் என மிக எளிய நடையில் அழகாக சொல்லும் பதிவு. அறிவியல்/ தொழில்முறை/தாராள மயமாக்கல் காரணமாக விவசாயத்தை சார்ந்து இருப்போரும், சிறு ஊர்களில் வசிப்போரும் நகரம் நோக்கி குடிபெயர்ந்து வருகிறார்கள்; மென்மேலும் வருவார்கள்; அதை சந்தை பொருளாதாரம், உலக மயமாக்கலின் கெட்ட பின் விளைவுகள் எனக் கருதாமல், எவ்வாறு வழிப்படுத்த வேண்டும் என முனைவதற்கு உங்கள் பதிவு ஒரு வழிகாட்டி.
ஒரு அன்பர் சைனாவைப்பற்றி பின்னூட்டத்தில் குறிப்பிட்டிருந்தார்; ஒரு பதிவில் தாங்களே, தொழில்/ ஏற்றுமதி விஷயங்களில் இந்திய- சீனா ஒப்பு நோக்கி எழுத வேண்டும் எனக் கேட்டுக்கொள்கிறேன்

1 comment: