Monday, November 29, 2010

கூட்டஞ்சோறு பதிவில் ஒரு பின்னூட்டம்

ராஜனின் உமா சங்கர் பற்றிய கட்டுரையின் தொடர்ச்சி
http://koottanchoru.wordpress.com/2010/11/28/2-%e0%ae%95%e0%ae%b2%e0%ae%bf%e0%ae%83%e0%ae%aa%e0%af%8b%e0%ae%b0%e0%af%8d%e0%ae%a9%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%89%e0%ae%ae%e0%ae%be-%e0%ae%b7%e0%ae%99/#comment-3807
//தமிழக அரசின் ரெவின்யூ டிப்பார்ட்மெண்டில் நிலவும் லஞ்சத்தின் நிலமை அதற்கான காரணங்கள் ஆகியவற்றை ஒளிவு மறைவின்றிப் பேசினார்.//
// ஒரு அரசு அதிகாரியே அரசாங்கத்தில் நடக்கும் ஊழல்களை லஞ்ச லாவண்யங்களை எந்த விதத் தயக்கமும் இல்லாமல் வெளிப்படுத்தியதுஆச்சரியமே. கலெக்டர் ஆஃபீசின் ஒவ்வொரு நிலையிலும் லஞ்சம் கொடுக்காமல் எதையுமே சாதிக்க முடியாது என்பதை விளக்கினார்//
என்று சொல்லிவிட்டு
//இந்த ஊழல்களையும், மிரட்டல்களையும், அராஜகங்களையும் நிறுத்த வேண்டுமானால் இந்தியா ஊழலில்லாத தேசமாக மாற வேண்டும் என்றால் அரசியல்வாதிகளின் தலையீடு இல்லாத தன்னாட்சி அமைப்புகள் உருவாக்குவதே ஒரே வழி என்றார்//
இவ்வாறு சொல்வது ஏன் என்று புரியவில்லை.
அதாவது மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் லஞ்சம் வாங்குவதும், வாங்க சொல்வதும் அரசியல்வாதியா? லஞ்சம் அதிகமாக காரணம் அரசு அதிகாரிகள் தான் என்று உமா சங்கர் போன்ற சுத்தமான அதிகாரிகள் கூட ஒப்புக் கொள்ளாவிட்டால் அதை எப்படி களைவது?
சரி, ஒரு விஷயம். ஒரு அரசு அதிகாரி, அமெரிக்காவில் போய் இங்கு உள்ள சீரழிவுகளை பேசுவது முறையா?





யாதும் ஊரே யாவரும் கேளிர் : கணியன் பூங்குன்றனார்

2 comments:

  1. பலவித காரணங்களால் அரசு அதிகாரிகள் எல்லாம் முன்பு பயந்துபயந்து தான் மேசைக்குக் கீழே லஞ்சம் வாங்கினார்கள் ஆனால் இந்த அரசியல்வியாதிகள் லஞ்சம் வாங்கியதும் மட்டுமில்லாமல் அதை தைரியாமாக மேடைபோட்டு பெருமை பட்டுக் கொள்கிறார்கள்.அவர்களுக்கு மேளதாளத்துடன் வரவேற்பு வேறு.

    ReplyDelete
  2. //ஒரு அரசு அதிகாரி, அமெரிக்காவில் போய் இங்கு உள்ள சீரழிவுகளை பேசுவது முறையா?//

    இது முறையில்லை(அங்கு தான் சுதந்திரமாக பேச முடியுமா என்னவோ..)

    ReplyDelete