Wednesday, April 15, 2009

படித்ததில், கேட்டதில் பிடித்தது

யாதும் ஊரே யாவரும் கேளிர் : கணியன் பூங்குன்றனார்

படித்ததில் பிடித்தது :


அன்புள்ள அம்மா என்று எழுதினேன்
கூறியது கூறியலோ ?
அன்புள்ள அடித்து விட்டு
அம்மா என்று எழுதினேன்.
( புதுக் கவிதையை பொருட்டாக மதிக்க வைத்த கவிதை )


கேட்டதில் பிடித்தது:

கல்லூரி நாட்களிலே கவிதை புனைந்தது உண்டு

இப்போது வாழ்க்கையே கவிதையான பின்

தனியாக ஒன்று புனையவோ ?

( ஒரு உயர் நிலை காவல் துறை அதிகாரி பேசிக்கொண்டிருந்த போது சொன்னது )

[] [] [] [] [] []

கம்யூனிசத்துக்கும் கேபிடலிசத்துக்கும் என்ன வித்தியாசம்?

கம்யூனிசத்தில் வங்கிகளை அரசுடைமையாக்கி பின்னர் திவாலாக்குவார்கள்கேபிடலிசத்தில் திவாலான வங்கிகளை அரசுடைமையாக்குவார்கள்.

(சாத்தான் குளத்து வேதம் : 15 04 2009)

[] [] [] [] [] []

Tuesday, April 7, 2009

விரிவாகும் நரகம்

எமன், நரகத்தின் நிர்வாகி அழிக்கும் கடவுள் சிவனிடம் வருகிறான் .கடவுளே, எனக்கு ஒரு பிரச்னை

என்ன அது?

நரகத்துக்கு வருபவர் மிகவும் அதிகமாகி விட்டனர்.

கலியுகத்தில் இப்படி இருக்கும் என்று முன்னமே சொன்னோமே?

ஐயா அது சரி, தனி மனித குற்றங்கள் என்றுமே உண்டு. பக்ருளியாற்று கரையிலே பால் திருடியவன் உண்டு . சிறு திருட்டும், அடி, உதை, குத்து, கொலை, அதிகரித்து விட்டன தான். நான் அதைச் சொல்லவில்லை.

பின் வேறன்ன?

நான் சொல்வது காழ்ப்புணர்ச்சி காரணமாய் ஒரு இனத்தை, ஒரு கூட்டத்தை அழிக்கும் எண்ணம் மிக அதிகமாகிவிட்டது.

சிறிது விளக்கமாக சொல்

யூதர்களை இனம் பிரித்து அழிப்பது ஹிட்லரில் தொடங்கியது. இந்திய பாக் பிரிவினையின் போது முஸ்லிம் சொத்துகளை சூறை ஆடினார் சர்தார்களும் இந்துக்களும். இந்துப் பெண்களையும் சீக்கிய பெண்களையும் கற்பழித்த முஸ்லிம்கள். இந்திராம்மா இறப்பிற்கு பின் சர்தார்களை கொடுமையாகததாக்கிய இந்துக்கள்; தலைப் பாகையோடு தலையும் சேர்த்து உயிரோடு எரித்த கொடும் பாவி குல்லாக்கள்
கோத்ராவில் இந்துக் கூட்டம் இருந்த ரயில் பெட்டியை எரியூட்டினர் தீவிரவாதிகள். எதிர் வினையாக குஜராத்தில் முஸ்லிம்களுக்கு பெருமளவில் சேதம்விளைவித்தனர் இந்துக்கள்.
அஹமதாபாதில், பெங்களூரில், கோவையில், டில்லியில், மும்பையில், வாரணாசியில்குண்டு வெடித்த தீவிரவாதிகள்
விக்டோரியா டேர்மினசிலும் தாஜ் ஹோட்டலிலும் கண்டேன் சுட்டேன் என்று கொன்ற தீவிரவாதிகள். இப்போது இலங்கை கிரிக்கெட் குழுவைத் தாக்கிய தீவிரவாதிகள்.
ராஜீவ் காந்திகளையும், அமிர்த லிங்கங்களையும் கொன்ற புலிகள் புலிகளையும் புலிக் குட்டிகளையும் கொன்ற ராஜபக்ஷேகள்
கடவுளே, நான் சொன்னது மிகக் குறைவு
நடந்தவை மிக அதிகம்.
என் சிற்றறிவுக்கு எட்டியவரை இதற்கெல்லாம் ஒரே காரணம் : காழ்ப்புனர்ச்சி
விருப்பு வெறுப்பு இன்றி உன் கடைமையை செய்யச் சொன்னால் அனல் கக்குகிறாய்

மன்னிக்க வேண்டும் . பூலோகத்தில் வெறுப்பு உணர்ச்சி மிகுந்து விட்டது. அது எமலோகத்தில் எதிரொலிக்கிறது. இன்னொன்றும் சொல்ல வேண்டும். தன் வாழ்நாளில் மனித நேயம் மிகுந்து வாழ்ந்தவர்கள் கூட இப்படி ஒரு சாவு வந்து விட்டால் அந்த ஆத்மா இங்கு வரும் போது வெறுப்பு மிகவே வருகிறது

சரி இப்போது என்ன செய்ய வேண்டும் ?
புவியில் மனித நேயம் ஒங்க வேண்டும்; நல்லிணக்கம் வளர வேண்டும். அதற்கு தாங்கள் ஒரு அவதாரம் எடுத்து எதாவது செய்ய வேண்டும்.
அன்பு தான் இன்ப ஊற்று எனப் பேசும் புத்த அவதாரம் எடுக்க வேண்டும்

நான் விஷ்ணுவுடனும் ப்ரம்மாவுடனும் பேசுகிறேன் . அப்புறம் ?

நரகத்தை விரிவாக்க உங்கள் உத்தரவு வேண்டும் காழ்ப்பு நகர் கோட்டம் என்ற புதிய கோட்டம் உருவாக்குகிறேன்

சரி. நாம் பேசிக் கொண்டிருக்கும் போதே அஸ்ஸாமில் வெடி குண்டுகள் : உல்பா தீவிரவாதிகள் நற்பணி . போய் வருபவர்களை கவனித்துக் கொள்