Wednesday, March 25, 2009

ஒரு பாகிஸ்தானியத் தாய்க்கு ஒரு இந்தியத் தாயின் கடிதம்

உங்கள் மகன்

சுற்றுலா பயணியாக வந்தால்
என் மகன் தோழனாவான்

நல்ல விருந்தாளியாக வந்தால்
என் மகன் பணியாளாவான்.

திகைக்காதீர், விருந்தினர்கள் எங்களுக்கு
இறைவனைப் போன்றவர்கள்
(அதிதி தேவோ பவ)

எதிரியே விருந்தாளியாக வந்தாலும்
இருப்பதைப் பகிர்ந்து கொடுப்போம்
உயிரையே கேட்டாலும் விருந்தாக படைத்தவர்களின் நாடு எமது.

நண்பனாக அனுப்பி வையுங்கள் உங்கள் மகனை.
அவன் எங்கள் தோட்டத்தில் இளைப்பாறலாம்.
மகனுடன் தோளோடு தோள்சேர்த்து
ஊர் சுற்றலாம்
என் மகள் புதிய அண்ணனுடன் கவிதையை ரசிப்பாள்.

உங்கள் உயிரையும் எங்கள்உயிரையும் ஒரு பொருட்டாகவே மதிக்காமல் உங்களை மந்தைக்கூட்டமாகவே நடத்தும் உங்கள் நாட்டின்
கொலைவியாபாரிகளின் போதனையில் மயங்கி
உங்கள் மகன் கொலையாளியாக வந்தாலோ -
என் மகனுக்கு வழியிருக்காது.
எதிர்த்து போரிடுவான்
உங்கள் மகனுக்கும் வேறு எண்ணமிருக்காது
எண்ணவே நெஞ்சம் திகைக்கிறது :
யாருடைய உயிரும் போகலாம்.

அப்போது எங்கள் பெருமூச்சு
உங்களை தினம்தினம் சுட்டெரிக்கும்

அது மட்டும் அல்ல. நாட்டை காக்க உயிர் துறந்த என் மகன் தியாகி ஆவான்.

அதே சமயம் உங்கள் மகனின் சாவும் கூட மிக அசிங்கமாகவே இருக்கும்.

கொலை வெறி இதயம் வெறி நாய்க்கு உணவாகும் (இது போன்ற கொலையாளிகளுக்கு இதயமே தேவை இல்லையே )

(ஒரு வலைப் பக்கத்தில் கண்ட " ஒரு அமெரிக்கத் தாய்க்கு ஒரு இராக் தாயின்கடிதம் " என்பதை வைத்து சிறு மாறுதல் செய்யப் பட்டது.
இது ஒரு கூட்டு முயற்சி )

2 comments:

  1. அருமையான மொழியாக்கம்.

    மேலும் பல சிறந்த பதிவுகள் இட வாழ்த்துக்கள்.

    நன்றி.

    ReplyDelete
  2. ரொம்ப நல்லா எழுதியிருக்கீங்க. மேலும் பதிவுகள் இட வாழ்த்துக்கள்

    ReplyDelete