லண்டன், பாரிஸ், லுசர்ன் (சுவிட்சர்லாந்து), பிசா/ரோம்/வெனிஸ், இன்ச்ப்ரூக் (ஆஸ்திரியா), முனீச்/பிரான்க்புர்ட் 
போய் வந்தேன்.  
விமானத்தில் போய் லண்டனில் இறங்கிய பிறகு, அதற்குப் பின் கப்பல் (இங்க்லீஷ் கால்வாயைக் கடக்க மட்டும்)  மற்றும் பேருந்து (பிரான்க்பார்ட் வரை).
உலகத்தின் " மிக நல்ல பகுதியை" மிக அனுகூலமான வானிலையுடன் (செப்டம்பர் பத்து=இருபத்து இரண்டு ) காண முடிந்தது.
நமக்கு பல விஷயங்கள் தோன்றினாலும், மிகவும் நினைக்க வைப்பது : மனித நடமாட்டம் மிக குறைவு:  சுத்தம்; பசுமை;   சாலை மற்றும் கட்டுமானம்; ஒழுக்கம் (சாலையை கடப்பதிலிருந்து பொது இடங்களில் நடந்து கொள்ளும் ஒவ்வொரு முறையும்), பேச்சு மிகக் குறைவு: தனக்கு மிகவும் நெருங்கியவர்களுடன் மட்டும் உரையாடல்.
 பல இடங்களில் இன்னும் ஒரு முறையாவது மீண்டும் இங்கு வர வேண்டும்,  வரும் போது    அதிக நாட்கள் இங்கு கழிக்க வேண்டும் என்று மீண்டும் மீண்டும் எண்ணியது உண்மை.
அவர்கள் கிராமங்கள் (பெருஞ்சாலையிலிருந்து கண்ட போது) மிக அழகாகவும் மிக செழிப்பாகவும் இருப்பதைக் காண முடிகிறது.  வெளிநாடு செல்லும் அரசியல் தலைவர்கள், பெரிய நிலை அரசு அதிகாரிகள் கிராமங்கள் உள்ளே சென்று " எவ்வாறு அவர்களால் உருவாக்க, பராமரிக்க  முடிகிறது? நாம் இந்தியாவில் என்னென்ன செய்ய முயலலாம்" என்று நினைப்பார்களா என்று நான் மீண்டும் நினைத்தேன்.  நாம் எதாவது மாற்றம் துவங்க முடியுமா என்றும் ஆற்றாமையுடன் எண்ணம் மேலோங்கியது.     

