யாதும் ஊரே யாவரும் கேளிர் : கணியன் பூங்குன்றனார்
http://
அரசுப் பள்ளிகளில் பணி புரியும் ஆசிரியர்கள் கூட தங்கள் பிள்ளைகளை மெட்ரி குலேஷன் பள்ளிகளில் சேர்த்தனர் என்பது உண்மையே. அதனால் பிற மக்களும் அப் பள்ளிகளில் தம் பிள்ளைகளை சேர்த்தனர் என்பதும் சரி. ஆனால் அது பாதி காரணம் தான்.அரசு பள்ளிகள் புதிதாக வரவே இல்லை என நான் நினைக்கிறேன். மதுரையில் பார்த்தால் டி வீ எஸ், சேதுபதி போன்ற பள்ளிகள் அரசு மானியத்துடன், அதாவது அரசு சம்பள ஆசிரியர்கள் தனியார் மேலாண்மையில் நடத்தப்படும் பள்ளிகள். திருச்சியில் செயின்ட் ஜோசப், ஈ ஆர், ஹோலி கிராஸ், மன்னார்குடி : பின்லே, புதுக்கோட்டை : டி ஈ எல் சி, ராணி பெண்கள் பள்ளி முதலிய பள்ளிகளும் அப்படித்தான். அன்பர்கள் தமக்கு தெரிந்த ஊர்களை நினைத்துப் பார்க்கட்டும் . இதே போல புதிய பள்ளிகள் துவக்கப் படாததற்கு காரணம் அரசு மானியம் மற்றும் அங்கீகாரம் அளிப்பதை நிறுத்தியதால், புதிய பள்ளிகள் மெற்றிக் பள்ளிகளாக துவங்க வேண்டியது ஆயிற்று. கல்வி துறைக்கு மானியம் அதிகரிப்பட்டது; ஆனால் அவை பள்ளிகள் இல்லாத சிற்றூர்களில் புதிய பள்ளி துவங்கவோ, இருக்கும் ஆசிரியர்களுக்கு அதிக சம்பளம் வழங்கவோ செலவு ஆகிவிட்டது. எனக்கு தெரிந்தவரை பெரும் ஊர்களில், நகரங்களில், அரசுப் பள்ளிகள் புதிதாகத் திறக்கப் படவில்லை . பெருகும் மக்கள் தொகைக்கு ஈடு கொடுக்க புது பள்ளிகள் என் வரவில்லை? இதை யார் கேட்பது? இப்போதும் ஒன்றும் குறைந்து போய் விட வில்லை. புதிய அரசுப் பள்ளிகள் திறக்கட்டும். நிர்வாகத்தை தனியாரிடம் கொடுத்து தரம் இருந்தால் மாணவர்கள் மெட்ரி குலேஷன் பள்ளிகளுக்கு ஏன் போக வேண்டும்? நான் அரசே நடத்திய அரசுப் பள்ளியில் படித்தவன் தான். அந்த கால கட்டத்தில் மெட்ரி குலேஷன் பள்ளிகள் வரத் துவங்கவில்லை.(1970 வரை ).அரசு பள்ளிகள்- அதாவது அரசே நடத்தும் பள்ளிகள் அல்லது அரசு ஆசிரியர்க்கு சம்பளம் கொடுக்கும்; ஆனால் நிர்வாகம் தனியாரிடம் உள்ள பள்ளிகள் மட்டுமே இருந்தன. தரத்தில் அவை மிக நன்றாக இருந்தன. அதாவது திராவிடக் கட்சிகள் அரசோச்ச வந்த பின் தான் அரசு பள்ளிகள் சீரழிவு துவங்கியது என நினைக்கிறேன் . தமிழ் கல்வியைப் பற்றியும் தங்கள் பதிவு பேசுகிறது. தமிழ் வழி கல்வி
ஐந்தாம் வகுப்பு வரையே கட்டாயமயமாக்கப் படலாம். சமூக இயல், வரலாறு, நில இயல் (பூகோளம்) , வீட்டுப் பாடமும் தோட்ட வேலையும் முதலிய பாடங்கள் முடிந்தால் பத்து வரை கூட தாய் மொழியிலேயே இருந்தால் நலமே.
ஆறிலிருந்து, அறிவியல், கணிதம் பயிற்று வழி ஆங்கிலமோ, தமிழோ என பெற்றோரின் தெரிவு இருக்கலாம்.
பத்து வரை தமிழில் கற்றோர் முன்பு தொண்ணூறு சதவீதம்.
இப்போதோ, பதினொன்று, பன்னிரண்டு வகுப்புகளில் பாடங்கள் பளு அதிகம் இருப்பதால், தமிழிலிருந்து ஆங்கிலத்துக்கு மாற வேண்டிய அழுத்தமும் இருந்தால் பிள்ளைகளுக்கு பட்டம்/ பொறியியல் /மருத்துவம்/ சேர்வது கடினம் ஆகி விடும்
தமிழ் குறைந்த பட்சம் பத்து வரை முழுமையாக அதாவது செய்யுள், உரைநடை, கட்டுரை, இலக்கணம் கற்றுவிக்க வேண்டும் : , kittipullu.blogspot.com/2010/06/blog-post_30.html#comment-form
Saturday, July 3, 2010
Thursday, July 1, 2010
ஒரு பின்னூட்டம் : நகரம் நோக்கி குடி பெயரும் ஒரு தொழிலாளி
http://deviyar-illam.blogspot.com/2010/06/blog-post_29.html#comment-form
மிக பயனுள்ள தகவல்களுடன் நல்ல பதிவு. நன்றி
ஒவ்வொரு படியிலும் சிக்கனம் செய்து, உழைப்போருக்கு , சிறு தொழில் செய்வோருக்கு குறைத்துக் கொடுத்து, உருவான பொருள் விற்கும் விலையைக் குறைத்து, மேல் நாட்டு இறக்குமதியாளன் லாபத்தை அதிகமாக்கி ஏற்றுமதி தொழில் மென்மேலும் உயர்கிறது என்றாலும், கருணா போன்ற ஆயிரக்க கணக்கானோர் சிற்றூர்களில் இருந்து
வந்து, நகர் வாழ்வியலையும், தொழில் முறையும் உள்வாங்கி தடம் பதிக்கிறார்கள் என மிக எளிய நடையில் அழகாக சொல்லும் பதிவு. அறிவியல்/ தொழில்முறை/தாராள மயமாக்கல் காரணமாக விவசாயத்தை சார்ந்து இருப்போரும், சிறு ஊர்களில் வசிப்போரும் நகரம் நோக்கி குடிபெயர்ந்து வருகிறார்கள்; மென்மேலும் வருவார்கள்; அதை சந்தை பொருளாதாரம், உலக மயமாக்கலின் கெட்ட பின் விளைவுகள் எனக் கருதாமல், எவ்வாறு வழிப்படுத்த வேண்டும் என முனைவதற்கு உங்கள் பதிவு ஒரு வழிகாட்டி.
ஒரு அன்பர் சைனாவைப்பற்றி பின்னூட்டத்தில் குறிப்பிட்டிருந்தார்; ஒரு பதிவில் தாங்களே, தொழில்/ ஏற்றுமதி விஷயங்களில் இந்திய- சீனா ஒப்பு நோக்கி எழுத வேண்டும் எனக் கேட்டுக்கொள்கிறேன்

Subscribe to:
Posts (Atom)